பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தெய்வங் கொள்கையின் சார்பினைப் பெற்று நாட்டில் நிலையாக வேரூன்றி நிலைபெறுவாராயினர். வேதநெறிக்கு மாறான பெளத்த சமண மதங்கள் தமிழ்நாட்டில் அரசியலாட்சியில் வேந்தர்களின் சார்பினைப் பெற்று வைதிக நெறியை மட்டுமன்றித் தமிழ் மக்களது தெய்வங்கொள்கையினையும் கீழ்ப்படுத்த முயன்ற பிற்காலத்தில் வேதநெறிக்குப் புறம்பான புத்த சமண மதங்களுக்கும் வைதிகநெறியோடினைந்த சைவ வைணவ சமயங்கட்கும் நேரடியான போர் மூண்டது. அதன் பயனாகப் புத்தம் சமனம் ஆகிய சமயங்கள் வீழ்ச்சியடைவனவாயின.

இடைக்காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் திராவிடச் சான்றோரையடுத்துப்பெற்ற மெய்ப்பொருளுணர்வினால் வேள்வியில் தாம் முன்னர்ச் செய்து போந்த பசுக்கொலையை ஒழித்துத் தமது வேள்விச் சடங்கினைக் கடவுள் வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவாராயினர். அதன் பயனாக வேள்விக்குண்டத்திற்கும் அதன்கண் வளர்க்கப்பெற்ற தீச்சுடருக்கும் அறிகுறியாகச் சிவலிங்கத் திருமேனியையும் அதன் எதிரே இறைவனைச் சென்றணுகும் தூய உயிருக்கும் முன்னர் வேள்விக்களத்திலே வெட்டப்பட்ட மாட்டிற்கும் அதனைப் பலியிட்ட மேடைக்கும் அடையாளமாக நந்தியின் உருவையும், அதன் பின்னர்ப் பலிபீடத்தையும் கல்லிற் செய்து அமைத்தனர். ஆரியர் வருகைக்கு முன் பண்டைக் குடிமக்களால் மரநீழலிற் சிவலிங்கத் திருவுருவம் மட்டுமே வைத்து வழிபடப் பெற்றது. ஆரியக்குருமாரின் சேர்க்கையால் சிவலிங்கத்தின் முன் வேள்விக்குண்டமும் நந்தியும் பலிபீடமும் பிற்காலத்திற் சேர்த்தமைக்கப்பட்டன எனக் கருத வேண்டியுள்ளது. தமிழகத்திற் சிவபெருமான் திருக்கோயிலிலுள்ள பலிபீட அமைப்பு குறிஞ்சித் தினையொழுகலாற்றில் முருகவேள் வழிபாட்டில் இடம் பெற்ற மறியறுத்தலும், புறத்தினை யொழுகலாற்றில் கொற்றவை வழிபாட்டில் இடம்பெற்ற அவிப்பலியும் ஆகியவற்றின் அடையாளமாகவும் அமைந்திருத்தல் கூடும்

32. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 149.