பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

29


எனக் கருதுதற்கும் இடமுண்டு.

சிவபெருமானைச் சிவலிங்கமாகிய அருவுருவத் திருமேனியிற் பொதுவிடங்களில் வைத்து வழிபட்ட முன்னோர்கள், காலஞ்செல்லச் செல்ல அம்முதல்வனுக் கெனத் தனிக்கோயில் அமைத்த நிலையில் சிவலிங்கத் திருவுருவின் முன்ன்ா நந்தியும் பலிபீடமும் இடம்பெறுவன வாயின. இவ்வழிபாட்டில் சிவலிங்கத் திருவுருவமானது எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளைக் குறிப்பது. பலிபீடம் அம்முழுமுதற்கடவுளின் திருவருளைப்பெற விழைந்து செல்லும் ஒர் உயிர் தன்னைத் தோற்றமில் காலமாகப்பிணித்துள்ள பசுத்தன்மையாகிய யான் எனது என்னுஞ் செருக்கையும் வெட்டி வீழ்த்தும் ஓர் உயர்ந்த இடத்திற்கு அறிகுறியாகவும், பலிபீடத்தைக் கடந்து சிவலிங்கத்தின் எதிரிலே வைக்கப்பட்டிருக்கும் நந்தி அறியாமையும் செருக்கும் அற்றுத் தூய்தாகிச் சிவத்தின் திருவருட் பேற்றை நாடி முற்பட்ட துய உயிருக்கு அடையாளமாகவும் அமைக்கப் பெற்றனவாகும். இந்நுட்பம்,

"ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்

ஆய பசுவும் அடலே றேனநிற்கும்

ஆய பலிபீடம் ஆகுநற் பாசம்

ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்க்கே”

எனவரும் திருமந்திரத்தால் நன்கு விளக்கப்பெற்றுள்ளது. சைவ சித்தாந்தம் கூறும் பதி பசு பாசம் என்னும் முப்பொருளிலக்கணங்களையே சிவாலய அமைப்பு உணர்த்துகின்றது என்பதும், சிவலிங்கம், நந்தி, பலிபீடம் அமைந்த சிவாலயங்கள் திருமூலநாயனார் காலத்திற்கு முற்பட்ட தொன்மையுடையன என்பதும் இத்திருமந்திரப் பாடலால் நன்கு புலனாதல் காணலாம்.

திருக்கோயிலில் மூலத்தானமென்னும் கருவறையில் நிறுத்தப்பெற்றுள்ள சிவலிங்கம் முழுமுதற் கடவுளாகிய பதியையும், அதன் எதிரேயுள்ள நந்தி பதியை நாடிச்

33. திருமூலர், திருமந்திரம், 241.