பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அருளிச் செய்து, தெளிந்த நீர்ப்பெருக்கையுடைய கங்கையின் வேகத்தைத் தன் சடையின் ஒரு கூற்றிலே யடக்கி, முப்புரத்திலே தீயைச்செலுத்தி, வாக்காற் கூறப் படாமல் மனத்தால் குறித்த அப்பொருட்கும் எட்டாமல் நிற்கும் கடிதாகிய கூளியினது முகுகிடாத போரினையும் நீலமணிபோலும் மிடற்றினையும் எட்டுக் கைகளையும் உடைய இறைவனே! (இப்பொழுது என் கட்புலனாகத் தோன்றி நின்று) யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக.

(நின்கையில்) ஒலிக்கின்ற பறை பலவாச்சியங்களை யும் ஒலியா நிற்பக் கட்புலனாய்ப் பலவடிவுகளையும் மீண்டு நின்னிடத்தே ஒடுக்கிக் கொண்டு கொடிதாகிய 'கொட்டி’ என்னும் கூத்தை நீ ஆடுகின்ற காலத்துப் பக்கம் அகன்ற குறியினையுடைய கொடியினையொத்த இடையினை யுடைய உமையம்மையோ தாளத்தின் முடிந்த காலத் தினைத் தன்னிடத்தே கொண்ட சீர்’ என்னும் தாளத்தைத் தருபவள்? (அங்கு அவளைத் தவிரப் பிறர் இல்லையே?)

மிக்குச் செல்கின்ற போர்களிற் பலவாகிய முப்புரங் களை வென்று அந்த வன்மையாலே அவ்வவுனர்கள் வெந்து வீழ்ந்த சாம்பராகிய நீற்றினை அணிதலாலே பாண்டரங்கம் என்னும் பெயர் பெற்ற கூத்தினை நீ ஆடுகின்ற காலத்து, மூங்கிலினது அழகையுடைத்தாகிய அணை போன்ற மெல்லிய தோள்களையும் வண்டுகள் ஒலிக்குங் கூந்தலையும் உடையாளாகிய பராசத்தியோ தாளத்தின் இடை நிகழுங்காலக் கூறாகிய தூக்கினைத் தருவாள்? (அவ்விடத்து அவளன்றிப் பிறரில்லையே!)

கொலைத் தொழிலையுடைய புலியைக்கொன்று அதன்தோலை உடுத்துக் கொன்றைப்பூமாலை தோளிலே கிடந்தசைய அயனுடைய தலையினை அகங்கையிலே ஏந்துதலாலே காபாலம் என்று பெயர் பெற்ற கூத்தை நீ ஆடுங்காலத்து, முல்லையரும்பினையொத்த எயிற்றினை யுடைய மலைமகளோ தாளத்தின் முதலெடுக்குங் காலத்தினையுடைய பாணியைத் தருவாள்? (அவ்விடத்து அவளன்றிப் பிறர் இல்லையே!)