பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

381


'ஏற்றுவலன்'உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங்கணிச்சி மணிமிடற்றோனும்’ (புறம். 56)

எனவரும் சங்க இலக்கியத் தொடர்களால் நன்குபுலனாம். துயவெள்ளை நிறம் வாய்ந்த எருதினை (இடபத்தினை) கொண்டதன் உட்கருத்து துய்மெய்யுணர்வின் கண் நிலைபெற்று விளங்குபவன் இறைவன் என்பதாகும். இந்நுட்பம்,

& - - - * గు - 3. 'உணர்வெனும் ஊர்வதுடையாய் போற்றி

என வரும் தேவாரத் தொடரால் இனிது புலனாதல் காணலாம். இறைவனது ஊர்தியாகிய இடபத்தினை அறத்தின் வடிவாகக் கூறுதலும் உண்டு.

இறைவனுக்குரிய படைக்கலங்கள்

சிவபெருமான் தன் திருக்கைகளில் ஏந்திய படைக் கலங்களாகக் கணிச்சி - மழு, முத்தலைச்சூலம் என்பன குறிக்கப்பெற்றன. இறைவனுக்குப் படையாகக் கூறப்படும் கணிச்சியும் மழுவும் சொல்லால் வேறுபடினும் பொருளால் ஒன்றே என்பது பழையவுரையாசிரியர் உரையாற் புலனாகின்றது. இகலட்டுக், கையது கணிச்சியொடு மழுவே, மூவாய்வேலும் உண்டு அத்தோலாதோற்கே’ எனவரும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் கணிச்சியாகிய மழுவும் மூவாய்வேலாகிய முத்தலைச்சூலமும் சிவபெரு மானுக்குரிய படைக்கலங்களாகக் குறிக்கப்பெற்றன. மழு’ என்பது சிறிய கோடரி போன்று அமைந்த பரசு என்னும் ஆயுதமாகும்.

ஆனேற்றவிர்பூண்

முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய அப்தியும் கொடியும் ஆகிய ஆனேற்றினை (இடபத்தினை) நடுவில் வைத்து அதன் ஒருபக்கத்தில் திருமாலுக்குரிய நாந்தகம் என்னும் வாட்படையும் மற்றொரு பக்கத்தில் சிவனுக்குரிய மழுப்படையும் விளங்கப் பொன்னினாலும்