பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஆங்கே தெய்வவழிபாட்டிற்கு மிகத் துய்மையானதும் சமயத்திற்கு மிக உயர்ந்ததும் ஆகவும் உள்ள பொருளாகச் சிவலிங்க வழிபாட்டைக் கண்டனர். இதன் பண்பாடு மனித இனத்தை உயர்த்தக்கூடுமெனக் கருத்தக்க கொள்கையுடனும் தத்துவத்துடனும் இணைந்துள்ளது என்பர் 'சிவலிங்க வழிபாடு' என்னும் நூலுடையார்.

சிவலிங்க வழிபாடு இந்திய நாட்டில் மட்டுமன்றி முன்னொரு காலத்தில் உலக முழுவதும் பரவியிருந்தமை யினை ஆராய்ச்சியறிஞர்கள் பலரும் தமது ஆய்வு நூல்களில் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்கள். சிவலிங்க வணக்கம் முற்காலத்தில் ஆசியா, ஐரோப்பா, எகிப்து நாடுகளில் பரவியிருந்தது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ்’ எனப் பெயரிட்டு வழங்கினர். எகிப்தியரும் உரோமரும் கிரேக்கரும் பிரியாபஸ் என்னும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்திருந்தனர். 'பிரியாபஸ்’ என்பது இந்தியாவிற் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். அசா என்பவன் தன்னுடைய தாயைச் சிவலிங்கத்திற்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அவ்விலிங்கத்தை உடைத்தெறிந்தான் என்று விவிலிய மறை கூறுகின்றது. இலிங்கத்தின் முன்னால் பலிபீடத்தின் மீது சாம்பிராணி புகைக்கப்பட்டது. மாதத்தின் பதினைந்தாம் நாளில் பலி செலுத்தப்பட்டது. மாதத்தின் பதினைந்தாம் நாள் என்பது இந்து சமயத்தாரது அமாவாசை நாளாகும். இஸ்ரவேலர் வழிபட்ட இடபக்கன்று சைவர்கள் வழிபடும் நந்தியாகும். எகிப்தியரின் ஒசிரிஸ் கடவுளின் ஊர்தியாகிய 'அப்பிஸ்' என்னும் இடபமும் நந்தியேயாகும்.

கொலோனல் என்பார் இலிங்க வழிபாட்டினை அரேபியரின் லாட் அல்லது அல்ஹாட் வழிபாட்டோடு ஒன்றுபடுத்திக் கூறியுள்ளார்.

சிவலிங்க வழிபாடு உரோமருடன் பிரான்சுக்குச் சென்றது. அங்குள்ள கிறித்தவ ஆலயக் கட்டிடங்களில் இலிங்க வடிவங்களை இன்றும் கான லாம். அலக்சாந்திரியாவில் தாலமி நடத்திய திருவிழாவில் 129 முழவுயரமுடைய இலிங்கம் வீதிவலமாகக் கொண்டு