பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பொதுநூலாகக் கருதப்படினும் பன்னெடுங்காலமாகத் தமிழ் மக்கள் தம் வாழ்க்கையிற் கடைப்பிடித்தொழுகும் தெய்வக் கொள்கையினையும் அதனொடு தொடர்புடைய மெய் யுணர்வுக் கொள்கையினையும் ஐயத்திற்கிடனின்றித் தெளிவு படுத்தும் முறையில் இந்நூல் அமைந்துள்ளமை இங்குச் சிறப்ப்ாகக் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டின் தொன்மைச் சமயங்களாகிய சைவ வைணவ சமயங்கட்குச் சிறப்புரிமையுடையனவாகவுள்ள நம்பிக்கைக்கும் தொன்மைச் செய்திகட்கும் வழிபாட்டு நெறிக்கும் தத்துவ வுண்மைக்கும் ஆதாரமாகிய பொருட் குறிப்புக்கள் பல திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.

கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாக (அநாதியே) உள்ள பொருள்கள் என்பது சைவ சித்தாந்தத் தத்துவநெறியின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கைக்கு நிலைக்களமாகத் திருக்குறள் அமைந்துள்ளது. இறைவன் மன்னுயிர், உலகு எனத் திருக்குறளில் வழங்கும்சொல்லாட்சியினைக் கூர்ந்து நோக்குங்கால் இம்மூன்று பொருள்களும் தோற்றமில் காலமாகவுள்ள உள்பொருள்களேயென்பது ஆசிரியர் திருவள்ளுவர் கோட்பாடாதல் நன்கு தெளியப்படும். திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதலதிகாரத்தில் இறைவனாகிய பதியின் உண்மையும், வான்சிறப்பு என்னும் இரண்டாம் அதிகாரத்தில் உலகமாகிய பாசத்தின் உண்மையும் நீத்தார்பெருமை என்னும் மூன்றாம் அதிகாரத்தில் உயிர்களாகிய பசுவின் உண்மையும் முறையே உணர்த்தப்பெற்றன.

திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறளும் நான்மறைமுடிபாகிய உபநிடதங்களும் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் என்னும் மூவர் அருளிய தேவாரமும் திருவாதவூர் முனிவர் அருளிய கோவை திருவாசகமும் திருமூலர் அருளிய திருமந்திரமும் மேற்குறித்த முப்பொரு ளுண்மையினை அறிவுறுத்தும் திறத்தில் ஒத்த கருத்துடைய மெய்ந் நூல்களாகும். இவ்வுண்மையினை,

ÉÉ - - - t

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்