பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

435


கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.

இவ்வுலகிற்புறத்தே காணப்படும் பூத இருளானது, ஒருபொருளையும் காண முடியாதபடிக் கண்களை மறைத்து நிற்பது. இவ்வாறே உயிர்களின் அகத்தே அறிவுக்கண்ணினை மறைத்து நிற்பதாகிய இருளொன்று உண்டெனவும், அகவிருளாகிய அது தன் தன்மையிதுவென உயிர்கள் உணராதவாறு உயிர்களது அறிவினை மறைத்து நிற்றலால், ஆன்மாவாகிய பொருளையும் காட்டாது அதனை மறைத்துள்ள தன்னையும் காட்டாது நிற்குந்தனித் தன்மையுடையதெனவும் சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும்.

o: - w - - -

ஒருபொருளுங் காட்டா திருளுருவம் காட்டும் இருபொருளுங் காட்டா திது" (23)

என்பது திருவருட்பயன். உலகத்திற் புலனாகும் பூதவிரு ளாகிய புறவிருளும் உயிர்களின் அகத்தே விரவி நிற்கும் ஆணவ மலமாகிய அகவிருளும் மறைத்தற்றொழிலால் தம்முள் ஒக்குமாயினும் பூதவிருளானது பண்ட பதார்த்தங்கள் எல்லாவற்றையும் மறைத்தாலும் மறைத்து நிற்பதாகிய தன்னை வெளிக்காட்டி நிற்கும், ஆனவ மலமாகிய அகவிருளோ ஆன்மாவாகிய பொருளை மறைத்தலோடு இன்ன தன்மைத்தென ஒருவரும் உணராதவாறு தன்னையும் மறைத்து நிற்கும் தனித்தன்மை யுடைய தென்பதனை மேற்குறித்த திருவருட்பயனில் உமாபதிசிவாசாரியார் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளமை காணலாம்.

அறியுந்தன்மையுடைய உயிர்களின் அறிவாற்றல்லத் தடைசெய்து உயிர்கட்கு ஊனத்தை விளைத்து நிற்கும் 'இருள்” என்பதொரு மலம் அநாதியேயுண்டென்பதும், அவ்விருள்நீக்கத்திற்கு இறைவன் அருளும் சிவஞானமாகிய பொருளையே துணையாகக்கொண்டு இறைவனது புகழ்த் திறங்களைப் புகழ்ந்து போற்றி வழிபடுதல் இன்றியமையா தென்பதும்