பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


காதன்மிகுதியைக் கூறுவதாக அமைந்தது இத்திருக்குறள். 'உடம்போடு உயிரிடையுளவாகிய நட்புக்கள் எத்தன்மையன அத்தன்மையன, இம்மடந்தையொடு எம்மிடையுளவாய நட்புக்கள்’ என்பது இதன்பொருள். உடம்போடு, உயிர்க்கு உளவாகிய நட்புக்களாவன, உடம்பும் உயிரும் வேற்றுமை யின்றி இரண்டும் ஒன்றேயென எண்ணும்படி கலந்துவருதல், இன்பத் துன்பங்களை ஒக்க அனுபவித்தல், ஒன்றையொன்று இன்றியமையாமை என்பனவாம். இதனால் உயிர் உடம்புடன் கூடி வாழும் சகலநிலை விரித்துரைக்கப்பட்டது. உயிரும் உடம்பும் பொருட்டன்மையால் வேறாயினும் இன்ப துன்பங்களை நுகருந்திறத்தில் ஒன்றற்கொன்று இன்றியமை யாத கலப்பினால் ஒன்றாகவே கருதப்பட்டு வருதல் உலகியலிற்கண்டது. இத்தகைய கலப்பினை இருமையின் ஒருமை (அத்துவிதம்) என்றால் பொருந்தும். இவ்வுலகத்தில் ஒத்த அன்பினராய் இல்வாழ்க்கைக்கண் ஒழுகி மனையோடும் மக்களோடும் சுற்றத்தோடும் கூடி வாழ்ந்தவர்கள் பிறப்புப் பிணிப்பு நீங்கப்பெறும் சிறந்த பேரின்பத்தினை அன்புடைய ராய் இல்லறத்தில் ஒழுகிய நெறியின் பயன் என்று கூறுவர் பண்டைத்தமிழ்ச் சான்றோர். இவ்வுண்மை,

"அன்புற்றமர்ந்த வழக்கென்பவையகத்

தின்புற்றார் எய்துஞ் சிறப்பு” (திருக். 75)

எனவரும் திருக்குறளில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம். ஈண்டுச்சிறப்பு என்றது எல்லாப் பேற்றினும் சிறந்த வீடுபேறாகிய இந்நிலை உயிர்களின் சுத்தநிலை எனப்படும். வீடுபயக்கும் உணர்வாகிய ஞானப்பகுதி திருக்குறளில் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல் அவாவறுத்தல் என்னும் நான்கதிகாரங்களில் விரித்துரைக்கப் அவற்றுள் நிலையாமையாவது, உலகில் لقيَ سلاسلالا தோற்றமுடையனவாய்க் கானப்படும் எல்லாப் பொருள்களும் என்றும் ஒருபெற்றியனவாய் நிலையுத லிலவாந்தன்மை. காணப்படும் உலகம் உள்பொருளாயினும் என்றும் ஒருபெற்றியதாய் நில்லாது மாறுந்தன்மையாதலின் 'நில்லாவுலகம் என்றார் தொல்காப்பியனாரும். பிறப்பற்ற நிலையே வீடுபேறென்பதும் பிறவா நிலை பெறுதற்குத் தன்