பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

477


உண்மை. மக்கள்பால் அசைவின்மை - தளரா முயற்சி தோன்றுதற்கும் அவர்கள்பால் மடி - சோம்பல் குடி கொண்டிருத்தற்கும் ஊழ் காரணம் என்பதும் முயற்சிக்குக் காரணமாகிய ஊழ் ஆகூழ் எனவும் சோம்பற்குக் காரணமாக ஊழ் போகூழ் எனவும் ஊழ் இருவகைப்படும் என்பதும்,

&é + * - - * -

ஆகூழாற் றோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழாற் றோன்றும் மடி’ (திருக். 371)

எனவரும் இவ்வதிகாரத்து முதற்குறளால் விளக்கப்பெற்றன. ஆகூழ் ஆகுஊழ் - பொருளும் இன்பமும் அதற்குக் காரணமாகிய ஊழ், பொருள் இன்பம் ஆகியவற்றின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய தளராமுயற்சியும் சோம்பலையும் ஒருவர்க்கு ஊழ் காரணமாகவே அமைவன என்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. மக்களது வாழ்விலே புறத்தே வெளிப்படும் முயற்சி சோம்பல் என்பனவற்றுக்கேயன்றி அகத்தே தோன்றும் இயற்கை யறிவின் தொழிற்பாட்டிற்கும் அவ்வறிவு விரிவடையாத நிலையாகிய பேதைமைக்கும் ஊழே காரணமாவது என்பார்,

"பேதைப்படுக்கும் இழஆழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை” (திருக். 372)

என்றார் திருவள்ளுவர். ஒருவர்க்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்பொருளிழக்கும் இழஆழ்வந்தவிடத்து அவ்வூழ் அவரது அறிவைப் பேதைமைக்கு உட்படுத்தும். ஆகலூழ் வந்தவிடத்து அவரது அறிவு சுருங்கிய நிலையின தாயினும் அவ்வறிவை விரிவடையச் செய்யும் என்பது இதன் பொருளாகும். ஒருவர்க்கு இயற்கையானாய அறிவினை வேறுபடுத்தும் வன்மையுடையது ஊழென்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. ஒருவர் நுண்ணிய பொருள்களை யுணர்த்தும் நூல்கள் பல கற்றாராயினும் பேதைமைப் படுத்தும் ஊழ்வந்துற்றவிடத்து அவர்க்குத் தாம் முன்கற்ற கல்வியறிவு வெளிப்படாது பின்னும் தம் ஊழினாலாகிய பேதைமையறிவே வெளிப்பட்டுத் தோன்றும் என்பார், "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்” (திருக். 373)