பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


- 'கண்ணுதல் பாகம் ஆளுடையாள் என்றும்,

"திங்கள் வாழ் சடையாள் என்றும் திருவமாற்கு இளையாள் என்றும், "கொற்றவை', "ஐயை’, 'பாய்கலைப் பாவை’ என்றும் பாராட்டிய அடிகள்,

‘ஆனைத் தோல் போர்த்துப்புலியின் உரியுடுத்துக்

காணத் தெருமைக் கருந்தலை மேல் நின்றாயால்'

என்றும்,

“வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்

கரிய திரிக்கோட்டுக் க்லைமிசை மேல்நின்றாயால்'

என்றும்,

'சங்கமுஞ் சக்கரமுந் தாமரைக் கையேந்திச்

செங்கனரிமான் சினவிடைமேல்நின்றாயல்'

என்றும், சிவபெருமான் செய்தனவெல்லாம் சத்தி செய்தன வாகக் கூறி உள்ளார். அப்பெருமாட்டி வானோர் வணங்க மறைமேல் மறையாகிய ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி நிற்குமியல்பினையும், அரி, அரன், அயன் என்னும் முத்தேவர்கள் உள்ளக் கமலத்தே விரிந்த சோதிப்பொருளாக விளங்கி நிற்கும் இயல்பினையும், கங்கையைச் சடைமுடியில் அணிந்த கண்ணுதற் கடவுளின் இடப்பாகத்தே உமா தேவியின் உருவாய்த் திகழுமியல்பினையும், விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சமுண்டு இருந்தருள் செய்யும் இயல்பினையும் விேட்டுவர்கள் எடுத்துரைத்துப் போற்றுகின்றார்கள். சிவபெருமானுக்குரிய கொன்றை மலரும் திருமாலுக்குரிய துளவமும் ஒருசேரத் தொடுத்த மாலையைக் கொற்றவையின் தோள்மேல் வேட்டுவர் அணிகின்றனர். இவ்வாறு அணியுங் குறிப்பு சிவ வழிபாடும் திருமால் வழிபாடும் கலந்த நிலையில் அமைந்தது கொற்றவை வழிபாடென்பதனை வலியுறுத்துகின்றது.

'கொன்றையுந் துளவமுங் குழுமத் தொடுத்த

துன்று மலர்ப் பிணையல் தோள்மே லிட்டு ......

o

என்பது நோக்கத்தக்கது.