பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

521


மறக்கள வேள்வி செய்யாது அறக்களவேள்வியைச் செய்தல் வேண்டும் என அறிவுறுத்தலாலும், அக்காலத்து வேதநூல் முறைப்படி அழற்கடவுளைப் போற்றி வேள்வி செய்யும் வழக்கம் வேத நெறியாளர்பால் நிலைபெற்றிருந்தமை நன்கு புலனாகும்.

வசுக்கள் எண்மரும், அருக்கர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் ஆகிய முப்பத்து முக்கோடித் தேவர்களுக்கும், பதினெண்வகைப் பட்ட தெய்வ கணங்களுக்கும் புகார் நகரத்தே திருவிழா நடைபெற்றன என்றும் ஊர்ப்புறத்தே பாசண்டச் சாத்தனுக்குக் கோயில் அமைந்திருந்தது என்றும் சிலப்பதிகாரம் கூறும்.

புறச்சமயங்கள்

காவிரிப்பூம்பட்டினத்தில் அருகர் பள்ளியும் புத்தர் பள்ளியும் இருந்தன. நிக்கந்தக் கோட்டம் என்பது அருகன் கோயில். கோவலன் புகார் நகரத்தை விட்டு மனைவியுடன் வைகறையில் புறப்பட்டு வந்தபொழுது ஐந்து கிளைகளை யுடைய அரசமரமாகிய மாபோதி நிழலில் எழுந்தருளிய புத்தன் அருளிச் செய்த ஆகமங்களை உணர்ந்த ஆகாய சாரிகள் மறைய இருந்து எல்லோர்க்கும் உண்மைப் பொருளை யுபதேசித்தற் பொருட்டு இந்திரனால் அமைக்கப்பட்ட புத்த விகாரங்கள் ஏழினையும் முறையே கண்டானென்றும், புலாலுணவைத் துறந்து பொய் கூறாமையாகிய விரதத்தோடு அழுக்காறு முதலிய குற்றங்களை நீக்கி ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருள் உணர்ந்த பெரியோர் கூடிய பூரீகோயிலில் அருகர், சித்தர், உபாத்தியார், ஆசிரியர், சாதுக்கள் என்னும் பஞ்ச பரமேட்டிகள் நிலைபெற்ற ஐந்து சந்துங் கூடிய நடுவிடத்தே அமைந்த மன்றின் கண்னே அசோகின் நிழலிலே விழாக் காலங்களில் ஆகாய சாரிகளாகிய சாரணர்கள் வருவார்க ளென்று சமனரில் இல்லறத்தாராகிய சாவகர்கள் இட்ட சந்திர காந்தக் கல்லாகிய சிலாவட்டத்தைக் கோவலன் தொழுது வலங்கொண்டான் என்றும், பின்னர்க் காவிரிக்