பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

531


தானமாக்க் கொடுத்தலும் அக்காலத்துப் பொது மக்களும் வேந்தர்களும் நான்மறைவல்ல வேதியர்களை நன்கு மதித்துச் சிறப்பாக ஆதரித்தனர் என்பதனை நன்கு புலப்படுத்து வனவாகும். -

மண்ணுலக வேந்தன் முசுகுந்தன் பொருட்டு வானோர் தலைவன் இந்திரனால் அனுப்பப்பட்ட பூதம் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் கொண்டிருத்தலும், அப்பூதம் தீமைசெய்தோரை ஒறுத்தலும், மயன் என்னும் தெய்வத்தச்சன் மன்னர்க்குப் பட்டி மண்டபம் முதலிய நிருமித்துக் கொடுத்தலும், இந்திர விழாவைக் கான வித்தியாதரர்களும் தேவர்களும் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்து போதலும், அந்நகரத்திலுள்ள ஐவகை மன்றங்க்ள் தெய்வச் சிறப்புடையவாகத் திகழ்தலும் ஆகிய வியப்புடைய செய்திகளை இளங்கோவடிகள் தமது காப்பியத்திற் குறித்துள்ளார். இவற்றால் அக்கால மாந்தர்களுக்குத் தெய்வச் செயல்களில் நிரம்பிய ஈடுபாடுண்மையை இளங்கோவடிக்ள் விளக்கினர்ராவர்.

இளங்கோவடிகள் காலத்தே சிவன், திருமால், முருகன், கண்ணன், பலதேவன், அருகன், புத்தன் முதலிய தெய்வங்கள் பலவற்றுக்கும் நகர்தோறும்.பெருங்கோயில் அமைத்து வழிபடும் வழக்கம் நிலைபெற்றிருந்தமை சிலப்பதிகாரத்தால் நன்குணரப்படும். இக்கோயில்கள் எல்லாவற்றுள்ளும் தலைமையும் சிறப்பும் உடையதாய் விளங்கியது சிவபெருமான் திருக்கோயிலே என்பதனை, 'பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும் என்று முதற்கண் வைத்துக் கூறுதலால் உய்த்துணரப்படும்.

வம்பப் பரத்தனும் பரத்தையும் கூடி எள்ளி நகையாடிய நிலையில் சமணத் துறவியாகிய கவுந்தியடிகள் அவ்விருவரையும் நரியாகித் திரியும்படி சபிக்கின்றார். அச்சாபம் பெற்ற இருவரும் நரியாகிக் கூக்குரலிடுகின்றனர். இச்செய்தியால் தவறு செய்தோரைச் சபிக்க வல்ல துறவிகளின் பேராற்றல் புலப்படுத்தப்படுகின்றது.

திங்கட் குலத்தவராகிய பாண்டியர்கள் மறைமுது: