பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

533


தடுத்தலும், அந்நிலையிற் பாண்டியன் மேகத்தை விலங்கிட்டுச் சிறையிலடைத்ததும் ஆகிய செய்திகள் குறிக்கப் பெற்றுள்ளன. பழைய வரலாறுகளாகிய இவையைைனத்தும் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெற்றுள்ளமை திங்கட்குலத்திற் பிறந்த பாண்டியர்கள் சிவபெருமானுடைய திருவருள் வழியில் வந்தவர்கள் என்னும் புராணத் தொட்டர்பினை வற்புறுத்தல் காணலாம்.

கண்ணகியார் பாண்டியன் அவையில் வழக்கு உரைக்குமிடத்துத் தான் பிறந்த சோழநாட்டினையாண்ட வேந்தர்களின் நீதிமுறையினை எடுத்துரைக்கும் நிலையில் சோழ மன்னன் தன்னை அடைக்கலம் புகுந்த புறாவினைக் காப்பாற்றுதற்பொருட்டும் அதனைத் துரத்திவந்த பருந்தின் பசியினைத் தீர்த்தற்பொருட்டும் தன்னுடம்பின் தசையினை அரிந்து கொடுத்த இரக்கச் செயலையும், தன்மிகனது. தேர்க்காலில் அரைபட்டிறந்த இளங்கன்றின் பிரிவாற்றாது கண்ணீர்விட்டுக் கதறிய தாய்ப்பசுவின் துயரத்தைக் கண்டு பொறாது, தன்னுடைய ஒருமைந்தனையே தேர்க்காலிற் கிடத்தி முறைசெய்த சோழமன்னனது நீதிமுறையையும் பாராட்டிக் கூறுவதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இவ்வாறே தம் குடியிற் பழையோராகிய சேரமன்னர் புகழ் பெற்ற செய்திகளையும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

வேண்டுதல் வேண்டாமையிலாத அரசத்துறவி இளங்கோவடிகள் அவர் தம் காலத்தில் தமிழகத்தில் நிலவிய பல சமயச் சார்புடைய தெய்வவழிபாட்டு முறைகளை யெல்லாம் தாம் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் நடு நிலை பிறழாமல் எடுத்துரைத் துள்ளார். எனவே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம் அவர்காலத் தமிழ்நாட்டின் சமய நிலையை உள்ளவாறு உணர்தற்குத் துணைபுரியும் எனக் கொள்ளலாம்.