பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

543


"வான்தேர்ப்பாகனை மீன் திகழ்கொடியன்னக்

கருப்பு வில்லியையருப்புக்கனை மைந்தனை”

(மணி. 20, 91-92)

எனவரும் தொடரால் உணர்த்தப்பட்டது.

திருமால் மகன் பிரமன்

படைப்புக் கடவுளாகிய நான்முகனைத் திருமாலின் மகனெனவும் அவனருளிய நன்னூல் அருமறையெனவும் உணர்த்துவது;

“பொன்னணிநேமி வலங்கொள் சக்கரக்கை

மன்னுயிர் முதல்மகன் எமக்கருளிய அருமறை நன்னுால்” (udse-fl. 13.57-59)

என வரும் மணிமேகலைத் தொடராகும். 'முதுமறை முதல்வன்' என்பதும் நான்முகனுக்குரிய பெயர்.

"தெய்வக்கருவும் திசைமுகக் கருவும்

செம்மலர் முதியோன் செய்த அந்நாள்”

என மணிமேகலைப் பதிகம் கூறுதலாலும்,

“ஊழிமுதல்வன் உயிர்தலின் அல்லது

ஆழித்தாழியக வரைத்திரிவோர் தாந்தரின் யானுந்தருகுவன்" (மணி. 6. 172-174)

எனச் சம்பாபதி கூறுதலானும் படைப்புக் கடவுளாகிய பிரமனைக் கடவுளாக வேதவாதிகள் உடன் பட்டுரைக்குமாறு போன்று புத்தர்களும் உடன் பட்டுரைத்தல் காணலாம்.

குமரித்தெய்வம்

குமரித்துரையில் கன்னியாகுமரி என்ற தெய்வம் பண்டுதொட்டு மக்களால் வழிபடப்பெற்று வருகின்றது. இவ்வழிபாடு மணிமேகலை காலத்திலும் தொடர்ந்து நிலை பெற்றிருந்தமையினை,