பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

47


தோன்றி நிலைபெறுவனவாதலின் தெய்வக் கொள்கையினை அவ்வந்நிலத்துக்குரிய கருப்பொருள் வகைகளுள் முதன்மையுடையதாகப் பண்டைத் தமிழியல் நூலாசிரியர்கள் பகுத்துரைத்துள்ளார்கள். ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

தெய்வம் உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவுங் கருவென மொழிப

எனவரும் நூற்பாவில் மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாத உணவுக்கு முன் உயிர்க்குயிராக வழிபடப்பெறுந் தெய்வத்தை முதலாவதாக வைத்து எண்ணியுள்ளமை இங்குக் கூர்ந்து நோக்கத்தகுவதாகும்.

தமிழகத்திற் பண்டைநாளிற் காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை நிலத்தில் மாயோன் எனப் போற்றப்பெறும் திருமால் வழிபாடும், மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி நிலத்தில் சேயோன் எனப் போற்றப்பெறும் செவ்வேள்வழிபாடும், வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருதநிலத்தில் வேந்தன் (இந்திரன்) வழிபாடும், கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல் நிலத்தில் வருணன் வழிபாடும் தோன்றி வழங்கின. நானிலமக்களும் தாம் தாம் வாழும் நிலத்திற்கேற்ப அமைத்துக்கொண்ட இத்தெய்வ வழிபாடுகளை,

“மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

என வரும் சூத்திரத்தில் தொல்காப்பியனார் வகுத்துக் கூறியுள்ளார். நானில மக்களும் தாம் தாம் வாழும் நிலத்தியல்புக்கேற்ப வகுத்தமைத்துக் கொண்டன

1. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்தினையியல் S.