பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

559


என்னும் இடையனது உயிர் நீங்கிய உடம்பிற்புகச் செய்து உயிருடன் எழுந்தார். அது கண்டு பசுக்களெல்லாம் துயர்நீங்கி மகிழ்ந்தன. மூலனுடம்பு புகுந்த சித்தர் பசுக்களை யெல்லாம் சாத்தனூரிற் செலுத்திவிட்டு மீண்டு வந்து தமது பழையவுடம்பினை மறைத்து வைத்த இடத்திற்சென்று பார்த்தார். அவ்வுடம்பு அவர் அங்குத் திரும்பி வருவதற்கு முன்னரே இறைவனால் மறைக்கப்பட்டு ஒழிந்தது. அந்நிலையில் தாம் பாதுகாப்பாக மறைத்து வைத்த தம்முடம்பு காணாது போயினமைக்கு இறைவன் திருவருளே

காரணம் எனவுணர்ந்து தமது முன்னையவுடம்பினாற்

சிறிதும் பயனில்லையெனத் தெரிந்து கொண்டு மூலனாகிய

இடையனது உடம்பினையே தமக்குரிய உடம்பாகக்

கொண்டு திருவாவடுதுறைத் திருக்கோயிலையடைந்து அங்குள்ள அரசமரத்தின் அடியில் எண்ணில்லாத பல

ஆண்டுகள் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து சிவபரம்

பொருளைத் தியானித்துத் தாம் உணர்ந்த மெய்யுணர்

வுண்மைகளைச் செந்தமிழ் மொழியில் ஓராண்டுக்கு ஒரு

திருப்பாடலாக மூவாயிரம் திருப்பாடல்கள் அடங்கிய

திருமந்திரமாலை என்னும் ப்னுவலை அருளிச்செய்து

திருக்கயிலாயத்தையடைந்து சிவபெருமான் திருவடிநீழலில்

என்றும் பிரியாதுறையும் பேரின்பநிலையினைப் பெற்றார்

என்பது திருமூலநாயனார் வரலாறாகும். இவ்வரலாறு

சேக்கிழார் நாயனார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்

இருபத்தெட்டுத் திருப்பாடல்களால் விரித்துக் கூறப்பெற்றது. இவ்வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் திருமூலநாயனார்

அருளிச்செய்த திருமந்திரமள்லையில் சிவயோகியாராகிய அவர் தமது வரலாறு கூறும் முறையிலமைந்த பாயிரப் பகுதியிலுள்ள திருப்பாடல்கள் அகச் சான்றுகளாக அமைந்துள்ளன.

திருமந்திரமாலையின் நூலாசிரியர்க்குத் திருமூலர் என வழங்கும் இப்பெயர் அவர் மூலனுடம்பிற் புகுந்த பின்னரேயுளதாயிற்று. நந்தி திருவருள் பெற்ற நான் மறையோகியராய் இருந்த இவர்தம் முன்னைய நிலையில் இவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை உள்ளவாறு அறிந்துகொள்ளுதற்கேற்ற வரலாற்றுச் சான்றுகள்