பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கிரியாசத்தியாகும். இது பரவிந்து எனவும் படும். (இந்தக் கிரியாசத்தி சுத்தமாயைக் கூடிய விடத்து நாதம் தோன்றும் நாதத்தினின்று விந்துதோன்றும். இவை முறையே அபரநாதம் எனவும் அபரவிந்து எனவும் கூறப்படும்).

இங்குக் கூறப்பட்ட அறிவுநிலை, அருள்நிலை, ஞானசத்தி, கிரியாசத்தி இவை நான்கும் இறைவனுக்குரிய அருவத்திருமேனிகள்.

சதாசிவன் என்பது, தூலலயநிலையில் நின்று பொதுவகையாற் சங்கற்பித்த இறைவன், போகநிலையில் நின்று தனது ஞானசத்தியாற் சிறப்பு வகையால் நோக்கிக் கிரியா சத்தியாற் சிறப்புவகையாற் சங்கற்பித்து நிற்கும் நிலையாகும். ஞானமும் கிரியையும் சிறப்புவகையிற் கலந்து நிற்கும் போகநிலையாகிய இது சிவபெருமானுக்குரிய அருவுருவத்திருமேனியாகும்.

இனி, மகேசன் என்பது, சுத்தமாயையில் சூக்கும மாய்க் காரியந் தோன்றுதற்கு அதிகாரநிலையில் நின்று கிரியாசத்தியை மிக்குச் செலுத்திநிற்கும் நிலை. கிரியை மிகுந்து நின்ற அதிகார நிலை இதுவாகும். உருத்திரன் என்பது உலகினை ஒடுக்குந்தொழிலில் நின்ற திருமேனி யாகும். மால் என்பது, உலகினை நிலைபெறுத்திக் காக்குந் தொழிலில் நின்ற திருமேனியாகும். அயன் என்பது, உலகினைத் தோற்றுவிக்கும் நிலையில் மேற்கொண்ட திருமேனி. இவை நான்கும் உருவத்திருமேனிகள்.

பரமசிவத்துடன் பிரிவின்றியிருக்கும் பராசத்தியாகிய அருள்காரணமாகவே இங்குச் சொல்லப்பட்ட ஒன்பது வகைத் திருமேனிகளும் அமைந்தன என அவிவுறுத்துவார், "பலந்தருலிங்கம் பராநந்தியாமே என்றார் திருமூலர்.

“மலைமகள் பாகமாக அருள்காரணத்தின் வருவார்” எனவரும் தேவாரமும் இங்கு நினைத்தற்குரியதாகும்.

“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்’