பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வறுமையினாலோ நுகர்ச்சி வேண்டும் என்னும் ஆராமையி னாலோ இரத்தற்றொழிலை மேற்கொண்டான் அல்லன். ஏற்பதிகழ்ச்சி என்னுந் தாழ்வுரை உலக மக்களால் அடியார்க்கு எய்தாமற் பரிகரித்தற்பொருட்டே உலகெலா முடைய இறைவன் இரத்தற்றொழிலை மேற்கொண்டு பிச்சைத் தேவனாகத் திகழ்கின்றான் என்பது இத்திருப் பாடலாற் புலனாம்.

"படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப்பாரெலொம் ஆண்ட

முடியரசர் செல்வத்து மும்மை - கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தியுண்ப துறும்” (க்ஷேத்திரத் திருவெண்பா)

என ஐயடிகள் காடவர்கோன் நாயனாரும்,

"அங்கையோ டேந்திப்பலிதிரி கருவூர்” (திருவிசைப்பா)

எனக் கருவூர்த்தேவரும் அருளிய வாய்மொழிகள் அப்பெருமக்கள் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களது பற்றற்ற துறவுநிலையை நன்கு புலப்படுத்துதல் கானலாம்.

'செஞ்சுடரோன் முதலாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுட ரீசன் இறைவன் இணையடி தஞ்சுடராக வணங்குந்தவமே” (1975)

எனவரும் திருமந்திரம் இறைவன் அண்டத்துள் ஞாயிறாய் விளங்குந் திறத்தினை உணர்த்துவதாகும். செங்கதிரோன் முதலிய ஒளிமண்டிலங்கள் மேருமலையை வலம்வருவதன் காரணம், கயிலாய நாதன் கழல்களாகிய திருவடிகளை வனங்கி அத்திருவடியின் ஒளியினைத் தாம் பெற்று ஒளிர்தல் வேண்டும் என்னும் நோக்கமேயாம் என்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. எனவே அண்டங்களிலுள்ள ஞாயிறு முதலிய எல்லாச் சுடர்களுக்கும் ஒளிவழங்கும் ஆதித்தன் சிவனே என்பது பெறப்படும்.

&#. - - - - - -

மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல்

உத்தரகோசமங்கைக் கரசே” (திருவா. நீத்தல்)