பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

633


எனவரும் திருவாசகமும்,

“நாயகன் கண்ணயப்பால்நாயகிபுதைப்ப எங்கும் பாயிருளாகி மூடப் பரிந்துலகினுக்கு நெற்றித் துயநேத்திரத்தி னாலே சுடரொளிகொடுத்த பண்பிற் றேயமா ரொளிகளெல்லாம் சிவனுருத்தேசதென்னார்”

(72)

எனவரும் சிவஞானசித்தியாரும் இங்கு நினைக்கத் தக்கனவாகும்.

பசுவிலக்கணம் என்ற தலைப்பில், சிவனும் வேனும் பிரியாது உடனாய் விளங்குந் திறத்தினை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது,

"அன்னம் இரண்டுள ஆற்றங்கரையினில்

துன்னி இரண்டுந்துணை பிரியாதன தன்னிலை யன்னம் தனியொன்ற தென்றக்கால் பின்ன மடவன்னம் பேறனு காதே’ (2006)

எனவரும் திருமந்திரமாகும். "ஆற்றங்கரையிலே இரண்டு அன்னப்பறவைகள் ஒருங்கே உடனமர்ந்துள்ளன. அவையிரண்டும் தம்முள் பிரிப்பின்றி நெருங்கித் துணை பிரியாதுள்ளன. அவற்றுள் தன்னியல்பினதாகிய ஆண் அன்னம் வேறு பிரிந்திருப்பது என்றக்கால் அது பிரிய வேறுபட்ட பெண் அன்னம் வாழ்க்கைப் பேறாகிய இன்பத்தினை அடையமாட்டாது” என்பது இதன் பொருளாகும்.

"வாழ்க்கையாகிய ஆற்றின்கரை யெனப்படும் உடம்பின் கண்ணே உயிரும் சிவமும் ஒன்றியுள்ளன. தன்னியல்பினதாகிய சிவம் உயிரின் வேறாகப் பிரிந்து விடுமானால், அது பிரியத் தனிப்பட்டுள்ள ஆன்மா சிவப்பேற்றினை அடைதல் இயலாது” என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இத்திருமந்திரம் பிறிதுமொழிதல் என்னும் அணியின்பாற்படும்.

இரண்டும் அன்னமாயினும் அவற்றின் வேற்றுமை