பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

63


விருப்பம் அறிவு செயல் என்னும் மூவகை ஆற்றலும் ஒரளவு விளங்கப்பெற்று உலக நுகர்ச்சியில் ஈடுபடும் மக்கட்குலத்தாரிற் பெரும்பாலார் இன்ப நுகர்ச்சியில் விருப்பும் துன்ப நுகர்ச்சியில் வெறுப்பும் உடையராய்ப் பிறர் செய்த நல்வினைப்பயனைத் தாம் நுகரவும் தாம் செய்த தீவினைப் பயன்கள் தம்மைத் தொடராதவாறு விலகி யொழுகவும் முயலுதலை இவ்வுலகியல் நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே காண்கின்றோம். இங்ங்னம் ஒருவர் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை வேறொருவர் கவர்ந்து கொள்ளாதவாறும் தாம் நுகர்தற்குரிய தீவினைப் பயனாகிய துன்பத்தை நெகிழ விட்டுத் தப்பியோடாதவாறும் அவரவர் செய்த இருவினைகளின் பயன்களை அவரவரே நுகரும்படி அரசன் ஆணைபோல் வரையறுத்துச் செலுத்துவது இறைவனது ஆணையாகும். இறைவனது முறைசெய்தற் றன்மையாகிய ஆனை அந்தந்த உயிர்கள் செய்த இருவினைப் பயன்களை முன்னிட்டு அவ்வச் செயல்களைச் செய்வ தாகலின், ஊழினைத் துணையாகக் கொண்டு செயல்புரியும் இறைவனது ஆற்றலைப் பாலது ஆணை’ என்றார் தொல்காப்பியனார். பால் ஊழ் வகை நியதி விதி என்பன ஒருபொருட் கிளவி, ஒருபாற்கோடாது நடுநின்று ஆட்சிபுரியும் அரசனது ஆனை நிகழாதாயின் எளியோர் பொருளை வலியோர் கவர்ந்து கொள்வர். அதுபோல எல்லாப் பொருளையும் வகுத்து இயக்குபவனாகிய முதல்வனது ஆனையாகிய முறை நிகழாக்கால் ஒருவர் செய்த நல்வினைப் பயனை வேறொருவர் கவர்ந்து கொள்ளவும் தாம் செய்த தீவினைப் பயனைப் பிறர் மேற்சுமத்தவும் இடமுண்டாகும். இருவினையும் உணர்வற்றனவாதலின் அவை உயிர்கட்கு நுகர்ச்சியைத் தருதல் மாத்திரமேயன்றி அந்நுகர்ச்சிவினை செய்தானையே சென்றடையும்படிச் செய்விக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே உயிர்களுக்கு இருவினைப் பயன் முதல்வனது ஆனையினால் வரும் என்பதே பொருத்தமுடையதாகும். அரசன் தன் ஆணையை ஏனை அதிகாரிகள் பால் வைத்து அவர்களைக் கொண்டு அவ்வத்தொழில் செய்விக்குமாறு போல இறைவனும் தனது ஆணையை இருவினையின் மேல் வைத்து அது கருவியாக இருவினைப் பயன்களை உயிர்கட்கு