பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


శళ - 。警铃 மீளாவடிமையுமக் கேயாளாய்

என நம்பியாரூரரும் அருளிய வாய்மொழிகள் ஆன்மா, கட்டுநிலையில் மட்டுமன்றி வீட்டு நிலையிலும் முதல்வனுக்கு அடிமையாதலை நன்கு புலப்படுத்தல் அறியத்தகுவதாகும்.

உலக முதல்வனாகிய இறைவன் கலப்பினால் உடம்பின் உயிர்போல் அவ்வுயிர்களேயாகியும், பொருட் டன்மையால் கண்ணின் அருக்கன்போல உயிர்களின் வேறாகியும், உயிர்க்குயிராதல் தன்மையால் கண்னொளியின் உயிரறிவினையொத்து உயிர்களோடு உடன்ாகியும் இயைந்து நின்று, தன்னிற்பிரிவிலாச் சத்தியினால் ஊட்டப்பெறும் இருவினைகளால் அவ்வுயிர்கள் இறத்தலையும் பிறத்தலையும் புரியும்படி தனது திருவருளானையிற் பிரிப்பின்றி ஒன்றாய் நிற்பன் என்னும் உண்மையினை யுணர்த்துவது,

“அவையே தானே யாயிருவினையிற்

போக்குவரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே” (சிவ. சூ. 2)

எனவரும் சிவஞான போத இரண்டாஞ் சூத்திரமாகும். உலகுயிர்களோடு இறைவனுக்குள்ள தொடர்பு பேதம், அபேதம், பேதாபேதம் என்னும் மூன்றிற்கும் அப்பாற் பட்டதாய், 'ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றுமிரண்டும் இன்றாகாமல் இரண்டறக் கலந்து நிற்பதாகிய அத்துவித சம்பந்தம் என்பதனை அறிவுறுத்துவது இச்சூத்திரமாகும்.

முதல்வன், உடலும் உயிரும் போல் உலகெலாமாகி நிற்றலால் ஒன்றாகியும் கண்ணொளியும் கதிரவனொளி யும்போல் பொருட்டன்மையால் வேறுபட்டு நின்று அவற்றுக்கு விளக்கந்தருதலின் அவற்றின் வேறாகியும், கண் ஒருபொருளைக் காணும் நிலையில் உயிர் அதனொளியுடன் கலந்து நின்று பொருளைக்காட்டித் தானும் காணுமாறு போல முதல்வனும் உயிர்க்குயிராய்ப் பொருள்களை அறிவித்துத் தானும் உடனிருந்து அறிந்து உதவுதலால் உடனாகியும் இவ்வாறு கலந்து நின்று அருள்புரியும் அத்துவிதத் தொடர்புடையான் என்பது சைவசித்தாந்த