பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் திருவிருத்தத்தால் தெளிவாக விளக்கியுள்ளார். இதன் கண் இலகு உயிர்க்கு இச்சா ஞானக்கிரியைகள் எழுப்பும் மாயை' என்பது, மாயை உயிர்களுக்கு விழைவு அறிவு தொழில்களை எழுப்பும் தன்மையது என்பதனை விளக்கி நின்றது. விலகிடும் மலம் இவற்றை என்பது, ஆணவமலம் உயிரின் விழைவு அறிவு செயல்களை மறைத்துத் தடைசெய்து நிற்கும் தன்மையது என்பதனைக் குறித்து நின்றது. “உயிரோடு ஒற்றித்து நின்று அறிவிச்சை செயல்களை மறைப்பதாகிய மலத்துக்கும் வேறு நின்று அவற்றை விளக்குவதாகிய மாயைக்கும் வேற்றுமை பெரிதாகலான் மாயையே மலம் என்பார் மதம்போலி” எ னச் சிவஞானமுனிவர் ஆணவமலமும் மாயையும் தம்முள் வேறு என்பதனை நன்கு விளக்கியுள்ளார். இவ்விளக்கம் மாயை ஒண்தளை (அறிவு விளக்கத்தைத் தரும் தளை) ஆதலை நன்கு உறுதிப்படுத்துதல் காணலாம்.

"விளையாததொர்’ எனத் தொடங்கும் ஞான சம்பந்தப்பிள்ளையார் தேவாரத்தில் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும் மலத்தின் வைப்பு முறையும் அவற்றுள் ஒவ்வொன்றின் சிறப்பியல்புகளும் உரிய அடைமொழியுடன் சேர்த்து விளக்கப்பெற்றுள்ளன. விளையாததொர் பரிசில் வரு’ என்ற தொடர் ஆணவமாகிய பசு வேதனைக்கும், ஒண்மை (புத்திகூர்மை)யைக் குறிக்கும் ஒண்’ என்பது, உயிரைப் பற்றியுள்ள தளைகளுள் (கட்டுக்களுள்) ஒன்றாகிய மாயைக்கும் அடைமொழியாகிய அமைந்த நயம் வியந்து போற்றத் தகுவதாகும்.

உயிர்களைப் பிணித்துள்ள மும்மலங்களையும் நீக்கியருளவல்ல உயிர்த்துணையாவான் இறைவன் ஒருவனே என்னும் உண்மையினை,

“இழிப்பரிய பசு பாசப் பிறப்பை நீக்கும்

- לל என் துணையே

எனவரும் தொடரில் திருநாவுக்கரசர் தெளிவாகக் குறித்துள்ளார். இத்தொடரில் பசு என்றது பசுத்துவமாகிய ஆணவமலத்தையும் பாசம்’ என்றது கன்மமலத்தையும்