பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

755


எனவும்,

“காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே’

எனவும் வரும் அப்பர் அருள் மொழிகள் இறைவனது காட்டும் உபகாரத்தைப் புலப்படுத்துவனவாகும். இறைவனது சிறப்பியல்பாகிய சொரூப இலக்கணம் ஒன்றினையே சிறந்தெடுத்துக்கூறும் முறையில் அமைந்தது,

“கறையணி வேலிலர்போலுங் கபாலந்தரித்திலர்போலும்

மறையும் நவின்றிலர்போலும் மாசுணம் ஆர்த்திலர்போலும் பறையுங் கரத்திலர்போலும் பாசம் பிடித்திலர்போலும் பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே”

(2-65-1)

என வரும் பிரமபுரத் திருப்பதிகமாகும். இறைவன் செய்தனவாகப் புராணங்களிற் கூறப்படும் செயல்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறி, இச்செயல்கள் யாவும் உலக முதல்வனாகிய அண்னலாற் செய்யப்பட்டன அல்ல என மறுத்துரைக்கும் முறையில் இப்பதிகப்பாடல்கள் அமைந் திருத்தல் காணலாம். உலகப் பொருள்கள் ஒன்றினுந் தோய்வற நிற்கும் தன் உண்மை நிலையிற் சிவன் எனத் திகழும் தனிமுதல்வன், முன்னர்க்கூறப்பட்ட படைத்தல் முதலிய தொழில்கள் எல்லாவற்றையும் தன் தொழிலாகக் கூடி நின்று செய்யும் நிலையினும் தான் அத்தொழில் பற்றி விருப்பு வெறுப்புக் கொள்ளாது அவற்றில் தோய்வற விளங்குதல் பற்றி இறைவன் செய்தனவாகப் புராணங்கள் கூறும் அச்செயல்கள் யாவும் ஏகதேச நிலையில் ஒன்றிற் கருத்திருத்திச் செய்யும் முறையில் அவனாற் செய்யப்பட்டன அல்ல என உலக மக்களுக்கு அறிவுறுத்தும் நிலையில் ஞானசம்பந்தர் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார். இந்நுட்பம்,

“பெண்ணுரு ஆணுரு வல்லாப்பிரமபுர நகர்மேய

அண்ணல் செய்யாதனவெல்லாம் அறிந்து

வகைவகையாலே நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள் விண்ணவ ரோடினிதாக வீற்றிருப்பாரவர் தாமே" (2:68-11)