பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை, உள்ளத்தொகைத் திருக்குறுந்தொகை எனத் திருநாவுக்கரசர் அருளிய திருக் குறுந்தொகைகளின் அமைப்பாலும் அந்தக் கரணங்களின் வேறாயது ஆன்மா என்பதும் சகசமலத்தால் உணருந்தன்மை யிழந்த ஆன்மா அகக்கருவிகளாகிய அவற்றின் துணை கொண்டே அறியுந்தன்மையைப் பெற்றுப் பயனடைகின்றது என்பதும் உய்த்துணரப்படும்.

ஐம்பொறிகளாகிய வாயில்களும் அவற்றில் செல்லும் உணர்வுகளாகிய ஐம்புலன்களும் உயிராற் செலுத்தப் படுவனவாயினும் தம்மைச் செலுத்தும் உயிரை அறிந்து கொள்ளவல்லன அல்ல. அவற்றைப்போலவே தம்மை உள்நின்று செலுத்தும் தம்முனர்வின் தமியாகிய இறைவனை யுனரமாட்டா. அவ்வுயிர்கள் பொருள்களை அறிதல் என்பது, காந்தத்தைக் கண்ட இரும்பு அதன் முன்னிலை யளவிலே தொழிற்படுமாறு போல நினைவள வானே தூண்டிச் செலுத்தும் முதல்வனது திருவருள் முன்னிலை யாலே ஆகும் என்பது,

“விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக்

களந்தறிந்தறியா ஆங்கவை போலத்

தாம்தம் முணர்வின்தமி அருள்

காந்தங் கண்ட பசாசத்தவையே” (சிவ. சூ.5) எனவரும் சிவஞான போதச் சூத்திரத்தால் உணர்த்தப் பட்டது. இதனால் இறைவன் உயிர்களுக்குப் பொருள்களை அறிவிக்கும் உதவியாகிய காட்டும் உபகாரம் உணர்த்தப்

• لِنٹن سیاس سالا

"பொறிப்புலன்களைப் போக்கறுத்துள்ளத்தை

நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள்

அறிப்புறும் அமுதாயவன் ஏகம்பம்

குறிப்பினாற் சென்று கூடித்தொழுதுமே” (5-48-4)

எனவும்,

- - o - - - خية

கல்லாதனவெல்லாங் கற்பித்தானைக் காணாதனவெல்லாங் காட்டினானை” (6-43-1)