பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

763


நீழலில் மறைந்து நின்று அம்முதல்வன் அறிவுறுத்தியருளும் மெய்யுணர்வென்னும் படைக்கலங்களால் ஐம்புல வேடர்களை எய்துவெல்லலாம் என்பார்,

"புள்ளுவர் ஐயர் வேடர் புனத்திடைப்புகுந்து நின்று

துள்ளுவர் சூறைகொள்வர் துநெறிவிளைய வொட்டார் முள்ளுடையவர்கள் தம்மை முக்கணான்பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங்குணர்வினால் எய்யலாமே”

என அருளிச் செய்தார் திருநாவுக்கரசர்.

முன்னைத் தவத்தின் பயனாக இறைவனே குருவாக

எழுந்தருளிவந்து ஞானத்தினையுணர்த்த உணர்ந்த உயிரானது, தன்னை ஐம்பொறிகளுக்கு வேறாகப் பகுத் துனர்ந்த அந்நிலையிலேயே பிறிது காரணம் வேண்டாது தனக்கு ஆதாரமாகிய முதல்வனுடைய திருவடியைத் தலைப்படுவதாகும். தவத்தினில் உணர்த்த விட்டு அன்னியமின்மையின் அரன்கழல் செலுமே என்னும் மேற்கோளை வலியுறுத்தும் ஏதுவாக அமைந்தது, 'ஊசல் கயிறற்றால் தாய் தரையே யாந்துணையான்’ என வரும் சிவஞானபோதத் தொடராகும். இத்தொடரில் எடுத்தாளப் பெற்ற உவமையால், இவ்வான்மாவானது தன்னை ஐம்பொறிகளின் வேறு எனப்பிரித்துணரவே தமது முதல்வன் திருவடியை அனையும் என்ற மேற்கோளை நிலைநிறுத்தும் முறையில் இத்தொடர் அமைந்துள்ளது. இங்குக் குறிக்கப்பட்டுள்ள மேற்கோளும் ஏதுவும்,

“உறுகயிறுசல்போல ஒன்றுவிட்டொன்று பற்றி

மறுகயிறுசல்போல வந்துவந்துலவும் நெஞ்சம்

பெறுகயிறுசல் போலப் பிறைபுல்கு சட்ையாய் பாதத்

தறுகயிறுசலானேன் அதிகை வீரட்டனிரே” (4-26-4)

எனவரும் திருநேரிசையில் 'பிறைபுல்கு சடையாய் பாதத்து அறுகயி றுாசலானேன்’ எனவரும் தொடரை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம்.

உயிர்களது குறையுணர்வாகிய பசு அறிவினை ஊனக்கண் எனவும் எல்லாம் வல்ல முதல்வனது