பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

787


எங்களையாண்டு கொண்டிங்கெழுந்தருளும் மதுவளர் பொழிற்றிருவுத்தரகோச மங்கையுள்ளாய் திருப்பெருந்துறைமன்னா”

எனத் திருவாதவூரடிகள் தாம் அருளிய திருப்பள்ளி யெழுச்சியில் இறைவனே தமக்குக் குருவாய் எழுந்தருளிய திறத்தை வியந்து போற்றியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

இனி, சிவமானவா.பாடி (திருத்தெள்ளேனம்) எனவும், 'சிவமாக்கி எனையாண்ட அச்சோப்பதிகம்) எனவும், சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம் திருப்பெருந்துறையுறை சிவனே (கோயிற்றிருப் பதிகம்) எனவும் திருவாசகத்தில் வருந்தொடர்கள், அடிகள் காலத்துப் பரவிய மாயாவாதக் கொள்கையினை ஒரளவு தழுவி யமைந்தன என்பாருமுளர். இக்கருத்து ஒரு சிறிதும் பொருந்தாது என்பதனை ஆசிரியர் மறைமலையடிகளார் தாம் இயற்றிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் ஆராய்ச்சி நூலில் தக்க காரணங்காட்டி விளக்கி யுள்ளார்கள். திருமந்திரம் முதலிய ஏனைய திருமுறைகளை யும் எட்டாந்திருமுறையாகிய திருவாசகம் ஆகிய பனுவல் களையும் ஒப்புநோக்கிப் பயில்வார்க்குச் சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் சைவசித்தாந்தச் செந்நெறியினைக் கடைப் பிடித்தொழுகிய அருளாளர் அருளிய பொருளுரைகள் என்பதும் பிற்காலத்தெழுந்த மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கிற்கும் இத்திருமுறைகளே மூலநூல்கள் என்பதும் நன்கு புலனாகும்.

கடவுள், உயிர், உலகம் என்னும் இம்மூன்று. என்றும் உள்ள பொருள்கள் என்பது சைவசித்தாந்த , கொள்கை. பிரமம் ஒன்றே உள்பொருள், உலகம் .ெ மும் பொய்த்தோற்றமே என்பது மாயாவாதக் கொள்கை. சிவனருள் பெற்ற திருவாதவூரடிகள் ம ய வ தக், கொள்கையினையும் அதனோ1ெ த்த லக பதக்

ના

வரலாற்றறிஞர் தஞ்சை கே. எஸ். ரீநிவாசப்பிள்ளை அவர்கள் தி: தமிழ் வரலாறு நான்காம்பதிப்பு - பக்கம் 138,139)