பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

791


முனைப்பால் உயிர்களிடத்தே நிகழும் வினைகள் கொடுமை யுடையனவாதலின் கடியவினை’ எனவும் இவ்வாறு தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றிவருத்தும் பழைமை யுடையதாதல் பற்றிப் பழமலம்' எனவும், உயிர்கள் அடையும் எல்லாத் துன்பங்கட்கும் காரணமாதல் பற்றிப் பாசவேர்” எனவும், திருவாதவூரடிகள் ஆணவமலத்தின் இயல்பினை விளங்க அறிவுறுத்தியுள்ளார். இந்நுட்பம்,

"வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய

மாயஇருளை (சிவபுராணம்) 'அஞ்ஞானந்தன்னை அகல்விக்கும் நல்லறிவே'

(சிவபுராணம்) “பாசமாம் பற்றறத்துப்பாரிக்கும் ஆரியனே (சிவபுராணம்) ‘என்னுடையிருளை ஏறத்துரந்தும் (கீர்த்தித் திருவகவல்) 'அவன் வாங்கிய என்பாசத்திற்காரென்று'

(திருக்கோவை 109) ‘பாசந்தனையறுத்து ஆண்டுகொண்டோன்'

(திருக்கோவை 1.15) 'கடலின் திரையதுபோல் வருகலக்கமல மறுத்து

(உயிருண்ணிப்பத்து) 'கடிவினையகற்றிப்பழமலம் பற்றறுத்தாண்டவன்’

(திருப்பாண்டிப்பதிகம்) ‘பாசவேர் அறுக்கும் பழம்பொருள் (பிடித்தபத்து) எனவரும் திருவாசகம், திருக்கோவைத் தொடர்களால் இனிது புலனாதல் காணலாம்.

ஆன்மாவை மறைத்துள்ள ஆணவமலத்தின் இயல்பினைக் கூறுமிடத்து அம்மலத்தின் ஆற்றலைக் கெடுத்து உயிர்கட்கு மெய்யுணர்வளித்து உய்வித்தருளும் சிவத்தின் இயல்பினை, அஞ்ஞானந்தன்னை அகல்விக்கும் நல்லறிவே எனவும், மலம் அறுத்து எனதுடலும் எனதுயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான் எனவும், 'கழிவில் கருணை எனவும், பல்பொருள் எனவும், அவன்