பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தில்லையின் ஒளி எனவும் வரும் தொடர்களில் அடிகள் உடன் வைத்துணர்த்தியுள்ளார். முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாகிய சிவம் என்றும் நல்லறிவுப் பொருளாகத் திகழ்தலும், மலத்தினின்றும் விடுபட்ட உயிர் தன் பொருட்டன்மை சிதையாதிருக்க அவ்வுயிரின்கண் சிவம் புலப்பட்டுத் தோன்றி உயிரின் உடல் கருவி கரணங்களை அகத்திட்டு விளங்குதலும், பேரருளாள னாகிய இறைவன் உயிர்களின் மலத்துயரினைத் துடைத்துத் தனது பேரருளின்பத்தை உயிர்கட்கு வழங்கும் திருவருட் குறிப்புடையனாகத் திகழ்தலும் அம்முதல்வன் தன்பால் அன்புடைய அடியார்கட்கு அருள்வழங்குதற் பொருட்டுத் தில்லைச் சிற்றம்பலமாகிய அருள்வெளியிலே ஒளியுருவின னாக நின்று ஆடல் புரிதலும் இங்கு எடுத்துக்காட்டிய திருவாசகத் தொடர்களால் இனிது விளங்கும்.

உயிரும் சிவமும் பொருட்டன்மையால் இருவேறு பொருள்களாதலும், ஆன்மாக்கள் தோற்றமில் காலமாகவே மும்மலப் பிணிப்புடையனவாயிருக்க, முற்றுணர்வும் பேரருளும் அளவிலாற்றலும் வரம்பிலின்பமும் உடையனாய் இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இறைவன், உயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் விடுவித்து அவ்வுயிர்களைச் சிவமாகிய தன்னுடன் பிரிவின்றி ஒன்றும் வண்ணம், தனது அருளொளியில் அகத்திட்டுக் கொள்ளுதலும் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகப் பாடல்களால் நன்கு புலனாதலின், அடிகள் சைவ சித்தாந்த சமயத்தினராதல் நன்கு தெளியப்படும்

இறைவனது அருளுபகாரத்தால் மலப்பிணிப்பி வின்றும் நீங்கிய துயஉயிர்கள்பால் முதற்பொருளாகிய சிவம் முனைத்துத் தோன்றிப் பக்குவமுடைய உயிர்களைத் தன்னுளடக்கித் தன்னையே காட்டி நிற்கும் என்பது, “சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல்

முத்தர் பதப்பொருள் முத்திவித்தா மூலம் அத்தகை யான்மா அரனையடைந் தற்றார் சுத்த சிவமாவரே சத்தசைவரே” (1440)

எனவும்,