பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

807


எனவும்,

§§

முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கியெனையாண்ட அத்தனெனக் கருளியவாறார்பெறுவாரச்சோவே'

(அச்சோப்பதிகம் 1)

எனவும் வரும் திருப்பாடல்களில் மானிக்கவாசகப் பெருமான் தெளிவாகக் குறித்துள்ளார்.

ஆன்மா இங்ங்னம் சிவத்தோடு ஒன்றியியைந்து சிவமாகிய நிலையிலும் இறைவனுக்குரிய ஐந்தொழிலியற்றல் முதலிய தொழிலினைச் செய்யாததாய் அம்முத்தி நிலையிலும் இறைவனுக்கு அடிமையாய்ச் சிவாநுபவம் ஆகிய நுகர்ச்சி யொன்றிற்கேயுரியதாம் என்பது, சிவமாக்கி’ என்ற அளவி லமையாது 'எனையாண்ட என அடிகள் விதந்து கூறும் சொற்குறிப்பால் இனிது புலனாம்.

“உம்பர்பிரான் உற்பத்தியாதிகளுக்குரியன்

உயிர்தானும் சிவாநுபவம் ஒன்றினுக்குமுரித்தே"

(சித்தியார் சுபக். 319)

எனவரும் அருணந்தி சிவாசாரியார் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கியுணர்தற்குரியதாகும்.

வேந்தர் பெருமானாக விளங்கிய ஐயடிகள் காடவர் கோன் நாயனார் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங் களைப் பணிந்து ஒவ்வொரு வெண்பாவினாற் பரவிப் போற்றி யுள்ளார். அங்ங்ணம் இறைவன் கோயில் கொண்டருளிய தலங்களைப் பரவிப் பாடிய இனிய தமிழ் வெண்பாக்களின் தொகுதியே கூேடித்திரத் திருவெண்பா என்னும் பனுவலாகும். மறவாத பேரன்பினால் இறைவனது திருவருள் ஞானத்தால் சிவானந்த அநுபூதியைத் தலைப்பட்ட மெய்யடியார்கள் சிவவேடத்தையும் திருக்கோயில்களையும் சிவனெனவே தெளிந்து வழிபடுவர் என்பதற்குச் சிவாலயங்களமைந்த திருத்தலங்களைப் பாடிப் பரவிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றார்.