பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/815

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தாளே” என்பதும் திருவாசகத்திலும்.

“ஊன்கெட்டுயிர் கெட்டுணர்வு கெட்டென் உள்ளமும்

போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேனங் கொட்டாமோ”

என்பதும் கண்டு கொள்க’ எனச் சிவப்பிரகாசவுரையில் மதுரைச் சிவப்பிரகாசர் கூறும் விளக்கம் இங்கு உளங் கொளத் தக்கதாகும்.

இறைவனது திருவடியாகிய திருவருளே சிவஞான

மாகும் என்பது, "சிக்கல் வெண்ணெய்ப் பெருமானடி, ஞானமாக நினைவார் வினையாயின நையுமே” எனவரும் ஆளுடைய பிள்ளயார்வாய்மொழியால் இனிது புலனாகும். இத்தகைய சிவஞானத்துள்ளே தம் அறிவானது அடங்கிச் சிவத்தோடு இரண்டறக் கலந்து காணும் இக்காட்சியினையே உபநிடதங்கள் சோகம் பாவனை' எனவும் சிவாகமமாகிய சித்தாந்த மாமறைகள் 'சிவோகம் பாவனை' எனவும் கூறுவன. இந்நுட்பம்,

“மன்னிய சோகமாம் மாமறையாளர்தம்

சென்னியதான சிவோகமாம் ஈதென்ன

அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்

துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே” (2403)

எனவரும் திருமந்திரத்தாற் புலனாம்.

இறைவன்பாற் செலுத்த வேண்டிய அன்பினையும் அதனாற் பெறும் பேற்றினையும் இல்லையாகச் செய்து தம்மைப் பிணித்துள்ள பசுத்தன்மை பாசத்தன்மைகளை அறுத்து இறைவன் தன்திருவடிக் கண்ணே தம்மைப் பிரிவறச் சேர்த்துக் கொண்டதனையும் அங்ங்னம் தமக்குத் திருவடி நல்கியதே தம்மைச் சிவமாக்கியாண்டமையாதலையும்,

பத்திமையும் பரிசுமிலாப்பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவன் எனஎன்னை யாக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே'

شبجميع )