பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

811


சுழற்சியும் எல்லையற்ற நீர்த் திவலைகளும் பெருத்தும் சிறுத்தும் எண்ணிலவாய்த் தோன்றிமீளவும் அக்கடலிடத்தே அடங்குமாறு போன்று, இயங்குவன நிற்பனவாகிய உலகத்தொகுதி யனைத்தும் இறைவனிடத்தே தோன்றி மீளவும் அவனிடத்தே ஒடுங்குவன எனவும், தான் ஒன்றினுந் தோன்றாத, ஒன்றினும் ஒடுங்காத தனிமுதல்வனாகத் திகழ்வோன் இறைவன் எனவும் விளக்கப் போந்த திருவெண் &5ffi__4___t g_&5@ff,

“நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்

வரையில் சீகர வாரியும் குரைகடற் பெருத்துஞ் சிறத்தும் பிறங்குவதோன்றி எண்ணில வாகி யிருங்கட லடங்குந் தன்மை போலச் சராசர மனைத்தும் நின்னிடைத் தோன்றி நின்னிடைய டங்கும்நீ ஒன்றினுந் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்”

என அம்பலத்தாடும் உம்பர் நாயகனைப் பரவிப் போற்றுகின்றார். உலகனைத்தும் இறைவன்பால் தோன்றி ஒடுங்குவன என்னும் கருத்தமைந்த இத்தொடரை ஆதாரமாகக் காட்டி உலகத் தொகுதிக்கு முதற்காரணமாகத் திகழ்வோன் இறைவனே என்பது திருவெண்காட்டடிகள் கருத்தெனக் கருதுவாரும் உளர். அன்னோர் கருதுமாறு இவ்வுலகத் தொகுதி இறைவனை முதற்காரணமாகக் கொண்டு தோன்றியிருக்குமானால் முதற்காரணத்தோடு ஒத்தகுணங்களே அதன் காரியத்திலும் உள்ளனவாதல் வேண்டும் என்னும் நியதிபற்றி இறைவனாகிய சித்துப் பொருளை முதற்காரணமாகக் கொண்டு தோன்றிய காரியமாகிய உலகமும் சித்துப் பொருளின் குணமாகிய அறிவினையுடையதாதல் வேண்டும். உலகம் அறிவற்ற சடப்பொருள் என்பது யாவர்க்கும் உடன்பாடாதலின், அறிவில் பொருளாகிய அது அறிவுடைப்பொருளாகிய இறைவனை முதற்காரணமாகக் கொண்டு தோன்றியதெனக் கூறுதல் பொருந்தாது, உலகத்தொகுதி மாயையாகிய உள்பொருளிலிருந்து இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு விரிந்து மீண்டும் அதன்கண் ஒடுங்கும் என்பதே திருமூல நாயனார் முதலிய திருமுறையாசிரியர்களின் துணியாகும்.