பக்கம்:சொன்னார்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20என்னிடம் இப்போது ஏறத்தாழ 60,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இருக்கின்றன. என்னிடம் இருப்பது போன்ற ஒரு லைப்ரரி, வேறு யாரிடமும் (நட்சத்திரங்களுக்குள்) நிச்சயமாக இல்லை. எனக்கு அடுத்தபடியாக நடிகர் நாகேஸ்வரராவிடம் பெரிய புத்தகசாலை ஒன்று இருக்கிறது. எனது லைப்ரரியிலிருந்து அநேகர் படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கிப் போவதுண்டு. ஆனால் யாருக்குப் புத்தகம் இரவல் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக்கூடாதென்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

—நடிகர் நாகேஷ் (9-5-1973)

'முதலில் அவர் செய்யட்டும், பிற்பாடு நாம் செய்ய லாம்” என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் உங்களால் ஆனதை உடனே செய்ய வேண்டும். இன்றைய தினத்திலிருந்து நீங்கள் அனாவசியமாகத் தூங்காமல் ஒவ்வொரு நாளும் 'நான் இந்த தேச விடுதலைக்காக என்ன செய்தேன்' என்று உங்கள் மனதைத் தொட்டுப் பாருங்கள்.

—ராஜாஜி (1930

உங்கள் மீது சில ராக்கெட்டுகளைப் பாய்ச்சப்போகிறேன். மக்களுக்கு சுகாதாரத்தைப் போதிப்பது மாணவர்களாகிய உங்களது கடமை. நீங்கள் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். இப்பொழுது மேகநோய் (வி. டி.) விகிதம் அதிகரித்திருக்கிறது. உங்களுக்கு அந்த நோய் இருக்குமானால் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்களை முதலில் சரிப்படுத்தக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நமது மொத்த ஜனத்தொகைக்கும் அந்த நோய் பரவிவிடும். மாணவ, மாணவிகளான உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். உங்களுக்கு அந்த நோய் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

— இடிஅமீன் (உகாண்டா அதிபர்)