பக்கம்:சொன்னார்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


சின்ன வயதிலேயே எனக்கு நடிப்பின் மீது ஒரு பற்றுதல். பற்றுதல் என்று சொல்வதைவிட வெறி என்றுகூட சொல்லலாம். அந்த வெறியிலே தான் நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டே ஓடிப்போய் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டேன். என்னை எங்கெல்லாமோ தேடிப்பார்த்து அலுத்துப் போய்விட்ட என் பெற்றோர்கள் கடைசியில் என்னத் தேடுவதையே நிறுத்திக் கொண்டு விட்டனர்.

—நடிகர் முத்துராமன்

கிரிக்கெட்டும், ஹாக்கியும்தான் எனக்குப் பிடித்த விளையாட்டுக்கள். கல்லூரி டீம்களில் சேர்ந்து இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, முதலிய நாடுகளுக்கெல்லாம் போய் விளையாடியிருக்கிறேன். இப்போது நாலைந்து ஆண்டுகளாக வாரம் ஒருமுறை கால்ஃப் ஆடுகிறேன்.

—பக்ருதீன் அலி அகமது (1975) (இந்திய ஜனதிபதி)

திண்ணைப் பள்ளியில் நான் படித்த காலத்தில், அங்கு எனக்குக் கொடுக்கும் பாடங்களைச் சரிவர ஒப்பித்து விடுவேன். நான் பதினைந்து வயதில் திருக்குறள் முழுதும் மனப்பாடம் செய்திருந்தேன்.

—பாரதிதாசன் (6-5-1963)

நான் வறுமையில் உழன்று கொண்டிருந்த நேரத்திலும் கவலைப்படாதவன். என் நண்பர்கள் வீட்டில்-ஒரு நாளைக்கு ஒரு வீடு என்று சாப்பிட்டால் கூட சாகும்வரை சாப்பிட முடியும். நான் இனி சம்பாதிக்க வேண்டியதில்லை. அவ்வளவு நண்பர்களைத் தொண்டர்களைப் பெற்றிருக்கிறேன். அப்படியிருக்க நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் ஏன் கொள்கையைச் சொல்லப் பின் வாங்க வேண்டும்?

—எம்.ஜி.ஆர். (9-10-1972)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/28&oldid=1013135" இலிருந்து மீள்விக்கப்பட்டது