பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜாஜியின் மதிநுட்பம்

துவரையில் நான் ஏராளமாகச் சொற்பொழிவு செய்திருப்பேன். நான் தமிழில் பேசி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லப்பட்ட சொற்பொழிவு ஒன்றே ஒன்றுதான்.

சொற்பொழிவு நடந்த இடம் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி.

வங்காள கவர்னராக ராஜாஜி 1947ல் பதவி ஏற்றபோது நாங்கள் கல்கத்தா சென்றிருந்தோம்.ராஜாஜியின் விருந்தினராகத் தங்கும் பாக்கியம் கிடைத்தது. சாந்திநிகேதனில் ராஜாஜிக்கு ஒரு வரவேற்பு நடந்தது.

மிகவும் ரம்யமான வரவேற்பு வங்காளத்தின் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கூடியிருந்த அந்தச் சபையில் என்னைப் பேசும்படி தலைமை வகித்த திரு பி.சி.கோஷ் (அப்போதைய வங்காள முதன் மந்திரி) அழைத்தார். நான் திடுக்கிட்டுப் போனேன். ராஜாஜியைப் பரிதாபகரமாகப் பார்த்தேன்.

“சும்மா தமிழிலேயே பேசுங்கள். ரசிகமணி டி.கே.சி. ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்” என்று ராஜாஜி கூறினார். “சரி” என்று “மைக்” அருகில் வந்தேன்.

திடீரென்று ராஜாஜியே எழுந்து ஒரு மாலையை என் கழுத்தில் போட்டார். சபையோரின் கரகோஷம் அடங்கக் கொஞ்ச-

சொ.ந.9