பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜாஜி-காமராஜ்

“காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டாம்” என்று தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களில் ஒரு பகுதியினர் கிளர்ச்சி நடத்தினர். இந்தக் கிளர்ச்சியைத் தலைவர் காமராஜ் ஆதரித்தார். மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களும் அதே எண்ணங்கொண்டு தொண்டர்களைத் தூண்டி வந்தனர்.

“காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டும்” என்று தலைவர்களில் ஒரு சாராரும். தொண்டர்களில் சிறுபான்மையினரும் வாதாடினார்கள்.

நான் சிறுவயது முதற்கொண்டே ராஜாஜியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வந்தவன். அரசியலிலும் சரி-தமிழ்த் தொண்டிலும் சரி ராஜாஜி உடன் இருந்து பல காரியங்கள் செய்து வருபவன். ஆகவே “ராஜாஜி வேண்டும்” என்ற கோஷ்டியில் நான் சேர்ந்து பணிபுரிவது இயற்கையே! ஆனால் காமராஜ் என்மீது தனி அபிமானம் கொண்டிருந்தார். 1942 போராட்டத்தில் எனது ‘சாகசம்’ அவரைக் கவர்ந்திருந்தது. எனது நகைச்சுவைப் பேச்சு அவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் நான் காமராஜ் அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது என்னிடம் மிகவும் கோபமாக பேசினார் “ராஜாஜி 1942 போராட்டம் செய்தவர்களை எல்லாம் குண்டர்கள்-பலாத்காரவாதிகள் என்றெல்லாம் ஏசிப்பேசி நமது போராட்டத்தை எதிர்த்தாரே மறந்து விட்டீர்களா? 1942

சொ.ந-12