பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

சொன்னால் நம்பமாட்டீர்கள்



என் மனைவி அவர் காலில் விழுந்து கும்பிட்டு அவர் கையில் இருந்து குங்குமம் வாங்கி இட்டுக் கொண்டாள்.

“என்றும் சுமங்கலியாகவே நீங்கள் இருப்பீர்கள் என்று ராஜாஜி ஆசீர்வாதம் செய்தார். அதிலிருந்து ராஜாஜியிடம் என் மனைவிக்கு எப்பொழுதும் ஒரு தெய்வீக பக்தி ஏற்பட்டது. ஏதாவது ஒரு நல்லநாள் பெரியநாள் என்றால் ராஜாஜியிடம் ஆசி பெறாமல் எதையும் என் மனைவி செய்ய மாட்டாள்.

நாளுக்கு நாள் ராஜாஜி மீது பற்றும் பாசமும் என் மனைவி அதிகம் கொண்டு இருந்தாள்.

அரசியல் அபிப்பிராய பேதங்கள் பல ஏற்பட்டு ராஜாஜி சுதந்திரா கட்சி ஆரம்பித்த காலத்தில் என்னை அந்தக் கட்சிக்கு வந்து பணிபுரியும்படி சொன்னார்.

“நான் கடைசி வரையில் காங்கிரஸ்காரனாகவே இருந்து சாக விரும்புகிறேன். உங்களை அரசியல் தலைவராக நான் கருதவில்லை. எங்கள் குடும்பத்தின் தெய்வமாகத்தான் நாங்கள் கருதுகிறோம்” என்று சொல்லிவிட்டேன்.

ராஜாஜிகூட நான் சுதந்தரா கட்சியில் சேரவில்லை என்று என் மனைவி என் மீது கோபப்பட்டு இரண்டு நாள் சாப்பிடமாட்டேன் என்று பட்டினியாகக் கிடந்தாள்.

ராஜாஜி என் வீட்டிற்கு வந்து என் மனைவியை சமாதானப்படுத்தி, தான் இருக்கும்போதே தனக்கு நேராகவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி செய்தார்.

கடைசியாக ராஜாஜிக்கு உடல் நலம் இல்லை என்று கேள்விப்பட்டதும் என் மனைவி ஒருமுறை சென்று பார்த்து வந்தாள். பின்னர் இவளுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு