பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

235


எங்கும் போக முடியாமல் ஆஸ்பத்திரியிலும் வீட்டிலும் மாறி மாறி வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தோம்.

திடீரென்று ஒருநாள் ராஜாஜி இறந்த செய்தி கேள்விப்பட்டு அவரது சடலத்தைத் தரிசிப்பதற்காக நான் ராஜாஜி மண்டபத்திற்குச் சென்றிருந்தேன். பகல் சாப்பிடும் நேரம் வந்ததும் என்னை என் மனைவி விசாரித்து இருக்கிறாள்.

பக்கத்தில் இருந்த ஒருவர் ராஜாஜி அவர்கள் இறந்துவிட்டர்கள். அதற்காகப் போயிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். ராஜாஜி இறந்துவிட்டாரா?

அவர் சடலத்தையாவது நான் போய்ப் பார்க்கவேண்டும். ஐயோ யாரும் சொல்லவில்லையே, என்று அழுதுகொண்டே படுக்கையை விட்டு எழுந்திருந்தாளாம். பக்கத்தில் இருந்த உறவினர் எழுந்திருக்கக் கூடாது என்று எவ்வளவோ சொல்லியும் ராஜாஜியின் சடலத்தை தரிசிக்காமல் நான் எதற்கு இருக்க வேண்டும் என்று தட்டுத்தடுமாறி எழுந்து அருகில் இருந்த தன் தங்கையின் மீது விழுந்துவிட்டாள்.

எல்லோருமாகத் தூக்கிப் படுக்கையில் வைத்தபோது ராஜாஜி போய்விட்டாரே என்று சொன்னவாறு அந்த நிமிடமே உயிர் பிரிந்துவிட்டது.

ராஜாஜி ஆசி உரைத்தது போலவே “சுமங்கலியாகவே” ராஜாஜியைப் பின்பற்றி அவளும் சென்றுவிட்டாள்.