பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

சொன்னால் நம்பமாட்டீர்கள்


சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் சூரப்புலி சுந்தரராஜ் ஐயங்கார் என்பது ஆகும்.

எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீஸார் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி நான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள். எல்லோரையும் அவரவர் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள் அனைவரும் செய்தார்கள்.

இது நடந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பல ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக் கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ஜெயிலை உடை யென்றும் கட்டிடத்திற்கு தீ வை என்றும் பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.

கூட்டத்திற்குத்தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பால பாரதி செல்லத்துரை அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முன்னால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள்.

பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து “இப்பொழுது நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்.” நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள் என்று நான் திருப்பிக் கேட்டேன்.

“இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்” என்று சொன்னார். “சரி அப்படியே செய்யுங்கள்” என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை