உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

குமாரி: அப்போது தலைவலி என்று என்னிடம் சொன்னாயே!

செந்: வேறு என்ன சொல்வது தேவி!

குமாரி: (அவளைக் கிள்ளி) என்னை ஏய்த்து விட்டா போயிருந்தாய்! சரி—இரு இரு—நான் போகப்போகிறேன் விழாக் காட்சிகளைக் காண—அப்போது இங்கேயே நீ இருக்க வேண்டும்.

செந்: தனியாகவா?

குமாரி: தனியாகத்தான்! ஏன்? ஏனடி செந்தாமரை? வளை அணிந்த கரமாயிற்றே என்கிறாயா?

செந்: நான் சொல்வேனா...தேவி– அந்தக் கரம் வாள் ஏந்தி வீரத்தை விளக்கியதைக் கண்டவள் அல்லவா நான். (சோகமாக) தேவி இப்போதே புறப்படுவதாகத் தீர்மானமோ—.

குமாரி: (எழுந்து) ஆமாமடி, ஆமாம். இப்போதே தான். ஆனால் இப்படி அல்ல.

(புன் சிரிப்புடன் உள்ளே செல்கிறாள். செந்தாமரை, குமாரி உள்ளே செல்வதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்)

(சோலை நாட்டுக் கலைவிழா, மதிவாணன், வாலிபன் ஒருவனிடம் பேசுதல்)

மதிவாணன்: அழகான ஓவியம். தீட்டியவர் திறமைசாலி.