33
கொடியும்; "சொர்க்கவாசல் கைங்கரியம், இன்றே பெறுவீர் அருள் சீட்டு "இகபரசுகம்" தரும் அருள்சீட்டு இன்றே பெறுவீர் மெய்யன்பர்களே." "மார்க்கம் தழைக்க மாநிலம் செழிக்க அருள்சீட்டு பெறுவீர்," என்று வகை வகையாகப் பொறிக்கப்பட்ட விளம்பரத் தாள்களையும் ஏந்தியபடி ஊர்வலம் வருகிறது]
(ஊர் சாவடி. கவிராயரும் பூங்காவனமும் நிற்கிறார்கள். எதிரே ஒரு சிறு கூட்டம். கவிராயர் உணர்ச்சியுடன் பேசுகிறார்.
கவிராயர்:— மோசம்! அக்ரமம்! அருள் சீட்டு பெறாதீர்—அறிவை, இழக்காதீர் அன்பு, அறம் அஹிம்சை, தொண்டு, தூய்மை இவைகளைத்தான் ஆண்டவன் கேட்கிறான். அருள் சீட்டை அல்ல. மோசாண்டிகளின் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள். அருள் சீட்டு வாங்க வேண்டாம்—கிழித் தெறியுங்கள்—கொளுத்துங்கள்.
கூட்டத்தில் ஒருகுரல்: பைத்தியம்! கிழப்பைத்தியம்!
கவிராயர்: நானா!
குரல்: பாருங்கள் பாருங்கள்! நம்மைப் பைத்தியம் என்கிறான். துரத்துங்கள்,
(மேலே சிலர் பாய்கிறார்கள். பலர் தாக்குகிறார்கள்)
(கலைவிழா விடுதி! மதிவாணனும் வாலிபனும் உள்ளனர். மதிவாணன் பாடுகிறான்.)
மதிவாணன் பாடல்
இராகம்: வரசஸ்பதி தாளம்: ஆதி
பல்லவி
எங்கும் இன்பமே!...... உல
கெல்லாம் இன்பமே யாகுமினி
(எ)
அ.பல்லவி
மங்களமே பெறும் மாண்பு கொண்டாடும்.
மானிட வாழ்வில் மனதுதனாடும்
புனிதமான நினைவுபோல
(எ)