34
சரணம்
நிலவினிலே மாலைநேரத்திலே-அலை
நீத்திவரும் ஆழியோரத்திலே-வெண்
(நி)
களைதரும் அமுகான கரனத்திலே-இரு
காதலர் பாடும் சிங்காரத்திலே
மலர் நறுமணம் வீசும் வனந்தன்னிலே-யவ்
வனந்தன்னிலே மக்கள் கலந்தவனிலே-புய
வலிமைசேர் மறர் திறனிலே-தனது
மழலைபேசும் மொழி விழியிலே-பெண்கள்
எழிலிலே உழவர் செயலிலே-அறிஞர்
சபையிலே புலவர் கவியிலே-ஐம்
புலனிலே நன்றே காணும்
அறிவானந்தம் இன்பம்
அன்பால் மேவும் இன்பம்
பொங்கும் என்றும் சொந்தம் இயல்வன்
(மெங்)
மதிவாணன்: எப்படி—?
வாலிபன்: இசையில் மட்டுமல்ல—உன் பேச்சு—பார்வை எல்லாமே இன்பம் தருவதாகத்தான் இருக்கிறது—இந்த இன்பத்தை நான் அரண்மனையில்—
(உடனே பேச்சை வாலிபன் தயக்கத்துடன் நிறுத்திக் கொள்கிறான்.)
மதி: அரண்மனை வாசியா?
வாலி: (திடுக்கிட்டு) ஆமாம், அரண்மனைச் சேவகன்
மதி: ஓஹோ! அதனால்தான் அலங்காரம் இருக்கிறது உன் உடையில்! குறும்பு இருக்கிறது உன் பேச்சில்!
வாலி: சரி—நேரமாகிவிட்டது. நான் வருகிறேன்.
(போக முயற்சித்து எழுந்து நின்ற வாலிபனை ஆசனத்திலே தள்ளி,)
மதி: தம்பீ. இதோ பார், நான் கலை விழாவிற்காக மட்டும் சோலை நாட்டுக்கு வரவில்லை. வேறு காரியம் இருக்கிறது—உன் உதவி வேண்டும்.
வாலி: (ஆச்சரியப்பட்டு) வேறு காரியமா?
மதி: ஆமாம். எங்கள் வேழ நாட்டு மன்னர் திரு-