35
மண விஷயமான வேலை! தம்பீ, இந்த நாட்டு அரசியை உனக்கு நன்றாகத் தெரியுமே!
வாலி: (திகைத்து) தெரியும்—அரண்மனைச் சேவகன் தானே நான்!
மதி: ஆமாம்...அழகியா உங்கள் ராணி!
வாலி: (புனசிரிப்புடன்) அழகி என்றுதான் எல்லோரும் கூறக் கேட்டிருக்கிறேன்.
மதி: (அவன் தோளைத் தட்டி) உன் அபிப்பிராயம் என்ன அதைச் சொல்லடா தம்பி! நீ நல்ல ரசிகன். அதனால்தான் கேட்கிறேன், அரசி அறிவுள்ளவளா?
வாலி: (கோபம் கொண்ட முறையில்) எங்கள் அரசி அழகுள்ளவள்—அறிவுள்ளவள்—வீரமுள்ளவள்–வெற்றி வேலர்களை விரும்பாதவள்.
மதி: யாரிடமாவது காதல்?
வாலி: மனதைப் பறிகொடுத்து விட்டாள்.
மதி: யார் அந்தப் பாக்கியசாலி!
வாலி: (குறும்பாக) உன் வயது இருக்கும்,
மதி: ஏதேது—என்னைப் போலவே இருப்பான் என்று கூறி விடுவாய் போலிருக்கிறதே—
(வாலிபன் போக முயல்கிறான். உடனே. மதி, வாலிபனைச் சேர்த்துக் கட்டிப் பிடிக்க முயல்கிறான். வாலிபன் அவன் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். ஓரளவு பயம் தோன்றுகிறது வாலிபன் முகத்தில்.)
வாலிபன்: சரி–சரி—நான் இருக்கிறேன் - என்னைத் தொல்லை செய்யாதே–
மதி: ஆம்!...இதுதான் நல்ல தம்பிக்கு அழகு—உட்கார்,
(வாலிபன் எழுந்திருக்க, மதி, வாலிபன் கரத்தைப் பிடித்து கீழே இழுத்து உட்காரவைத்து.)
மதி: இன்று இரவு இங்கேதான் விருந்து! காலையில்தான் விடுதலை—உனக்கு!
வாலி: ஐயய்யோ! முடியாது-போய்த் தீரவேண்டும்!
(மதிவாணன் எழுந்து வாலிபன் கரத்தைப் பிடித்துத் தூக்கியபடி...?
மதி: சரி–புறப்படு-உன் வீட்டுக்கே போவோம்...எனக்கு அங்கு விருந்து -