உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சொர்க்கவாசல் திலகா உள்ளே போகக் கிளம்பவே மதிவாணன் ஓடிச்சென்று அவளைத் தாவிப் பிடித்து இழுத்து வந்து, மலர்க் குவியலைக் காட்டியபடி மேலும் பாடுகிறான் -திலகா மேலும் பாட விடாமல் 5055...] தில: மலரால் மகுடமா? மதி: (கனிவுடன்) ஆமாம் திலகா ! இன்று இந்த மலர் முழுவதும் உனக்கேதான். மகுடம், செண்டு, மாலை தில்: (கேலியாக) பச்சை, கெம்பு, மரகதம் .. மதி: அவையாகுமா இவை என்று கேலி செய்கிறாய், திலகா! உனக்கு மாளிகைகளைப் பார்த்துப் பார்த்து இந்த மன் மயக்கம் அதிகமாகிலிட்டது.. தில: மரம், செடி, கொடிகளுடன் பழகிப் பழகி நீ தவசியாகிவிட்டாயே, அதுபோலத்தான் அண்ணா! ஏதோ, உன்னால் எனக்கு இந்த மலர்களையாவது தர முடிகிறதே.. அடடா! தப்பு, தப்பு . அது கூட முடியாதுட் மதி: என்ன திலகா! ஏன் தர முடியாது-இதோ மலர் மாரி பொழிகிறது.பார். [என்று கூறியபடி பூக்குடலையைத் தூக்குகிறான், திலகா மீது கொட்ட. திலகா வெடுக்கென்று குட லையைப் பிடுங்கிக் கீழே வைத்தபடி.) தில: ஊர்த்தலைவர் சோமநாதர் உத்தரவு. இன்று நம் தோட்டத்து மலர் அவ்வளவும் மாளிகைக்கு அனுப்பி யாக வேண்டும். மதி: ஏனாம்? தில: வேண்டுமாம். மதி: அதுதான் நான் ஏன் என்று கேட்கிறேன்.