உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 11 தில: நானுந்தான் கேட்டேன். இன்று அவருடைய திருமகன் வருகிறாராம். திருவிழாவாம் மாளிகையிலே! அதற்கு மலர் தானம் செய்ய வேண்டுமாம். (கண்டிப் புடன்) மலர் தர முடியாது என்று கூறிவிட்டேன். '. ' மதி: சேச்சே! பாபம்! சோமநாதருக்கு அவர் மகனிடம் உயிர் திலகா! நடுநாட்டரசன் சபையீலே பெரிய பதவியாம் அவனுக்கு. பெயர், முத்துமாணிக்கம். தில: அதனால்? மதி: (பூக்குடவைகளில் மலர்களை நிரப்பியபடி உனக்கு, நாளைக்கு; இன்று மலரை அவருக்குக் கொடுத்து விடலாம். ஆனந்தமடைவார். - (என்று கூறிக் கொண்டே மலர்க் கூடையை எடுத் துக் கொண்டு புறப்படுகிறான் -திலகா, இந்த உரையாடலின்போது, மலர்களைக் கொண்டு, 'தவசி மதிவாணன்' என்று பொறிக்கிறாள்- அதைக் கண்டு திலகாவின் கன்னத்தைக் கிள்ளிய படி.] மதி: குறும்பு, திலகா! [மதிவாணன் புறப்படுகிறான்.) கா .2 இடம்: சோமநாதர் மாளிகை முன்வாயில் இருப்: சோமநாதர். நிலைமை: நாலைந்து பூட்டுகளுடன் சோம் நாதர் நிற்கிறார். மலர் மாலை கள், சந்தனக் கிண்ணங்கள், வர வேற்புக்குரிய சாமான்களுடன் சிலர் நிற்கின்றனர். தோரணங் கள் கட்டுவதும், அலங்கார வளைவுகள் கட்டுவதுமாகச் சிலர் உள்ளனர்.