102 சொர்க்கவாசல் மற்: தட்டினா கதவு திறக்காது-ஏன், அதுதானே கவலை? ஒரு : கேலி கிடைக்கட்டும்; தள்ளு ஒரு சீட்டு - மற்: விலை எப்படி தெரியுமேல்லோ? ஒரு: உள்ளதுதானே? மற்: அது போன மாதம் இப்ப உங்களுக்கு ஒன்பது பத்துக்கூட... ஒரு: அக்ரம விலையாயிருக்கே-நமக்குள்ளே கூடவா இப்படி? மற்: சிவனாணையா என்னிடம் கிடையாது சீட்டு. சிற்றம்பலத்திடம் வாங்கித் தருகிறேன் - நூறு ஒன்பது நூறு. ஒரு : நூறு ரூபா அருள்சீட்டுக்கு ஒன்பது நூறு ரூபாயா தரவேண்டும்? காட்சி -5 6 இடம்: மடாலயத்தின் உட்புறம் இருப்: மாசிலாமணி, நிர்வாகி நிலைமை: மாசிலாமணி, காரியாலய நிர் வாகியிடம் மாசி: இம்மாதம், புதிதா ஒரு ஆயிரம் அருள் சீட்டு தயாரிக்க ஏற்பாடு இல்லையா? நிர்: தயாராகுதே! மாசி: வேண்டாம். நிறுத்தி வை. நிர்: தேவையாயிருக்குதுன்னு ஊர்லே பலபேர்.. மாசி: பேசுவது தெரியும் எனக்கு. அதனாலேதான் இப்ப வேண்டாம், புதுச் சீட்டுன்னு சொல்றேன். பழைய சீட்டுக்கள் பறக்குதப்பா, ஒண்ணுக்கு பத்து விலைக்கு. பல ருக்கு நல்வ லாபம்-புதுச்சீட்டு புதுச்சீட்டு வெளியிட்டா படுத்துவிடும். விலை
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/102
Appearance