உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் நிர்: ஆமாங்க. 103 மாசி: உன்னிடம் எத்தனை இருக்கு? சொல்லய்யா! கூச்சம் என்ன? நிர்: நாலு... [நிர்வாகி தயங்க...] மாசி: நாலே நாலுதானா? சரி, என்ன விலைக்கு வந்தா கொடுத்துவிடலாம்? நிர்: உங்க இஷ்டமுங்க. மாசி: சாமர்த்தியக்காரன். சரி, கொடு நாலையும்- தொகை என்ன? நிர்: நாலும் ஆயிரம் ரூபா சீட்டுத்தான். மாசி: மொத்தத்திலே நாலாயிரம். நிர் உள்ளதுங்க. மாசி: பன்னிரண்டு வாங்கித் தந்து விடுகிறேன்- எடு நாலையும். நிர்: என் தம்பியோட சீட்டு எட்டு இருக்குங்க. மாசி: பலே ஆசாமி - சரி, அதையும் அதே விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். காட்சி-57 இடம்: ஊர்ச் சாவடி இருப்: கவிராயர், பூங்கோதை, மக்கள் நிலைமை: கவிராயரும் மகளும் நிற்கிறார் கள். எதிரே சிறு கூட்டம். கவி ராயர் உணர்ச்சியுடன் பேசுகி றார்,