உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சொர்க்கவாசல் கவி: மோசம்! அக்ரமம்! அருள்சீட்டு பெறாதீர் அறிவை இழக்காதீர். அன்பு, அறம், அகிம்சை, தொண்டு, தூய்மை, வாய்மை--இவைகளைத்தான் ஆண்டவன் கேட் கிறான். அருள்சீட்டு அல்ல. கொலை செய்தேன்; தண்டிக்கா தீர்-இதோ அருள் சீட்டு என்று காட்டினால் கடவுள் விட மாட்டார். கற்பழித்தேன் - ஆனால் அருள் சீட்டு இருக்கிறது என்றால் ஆண்டவன் விடமாட்டார். மோசாண்டிகளின் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள். அருள்சீட்டு வாங்க வேண் டாம்- கிழித்தெறியுங்கள்- கொளுத்துங்கள். சிறு கூட்டத்தில் பரபரப்பு உண்டாகி கிறது. கல் விழுகிறது. காட்டுக் கூச்சலிடுகின்றனர். கிழ வரை வேறு இடம் அழைத்துச் செல்ல மூதாட்டி முயற்சிக்கிறாள். அவர் இசையவில்லை...] (கூட்டத்தில் ஒரு குரல்] ஒரு குரல்: பைத்யம்! கிழப் பைத்யம்! கவி: நானா? குரல்: நாங்களா? பாருங்கள், பாருங்கள்! நம்மைப் பைத்யம் என்கிறான்--துரத்துங்கள். [மேலே சிலர் பாய்கிறார்கள். பண்டாரங்கள் கிழ வனைப் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள். பலர் தாக்குகிறார்கள். சகித்துக் கொண்டே முதியவர் "மெய் கண்டான்" பாடல் பாடுகிறார். மக்கள் வெறியடங்கி கூட்டம் கலைந்ததும் மூதாட்டி கவிராயரை மெதுவாகக் கூட்டிச் செல்கிறார் கள்.] காட்சி 58 இடம்: பாழடைந்த கோயில். இருப்: கவிராயர், பூங்கோதை, சேவகர்கள் நிலைமை. கவிராயரும் அவர் மகளும். குருடு, முடம், நொண்டி ஆன வர்களுக்குச் சோறிடுகிறார்கள்.