உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 105 ஒரு பழைய சுவனான கோயி வில். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அர சாங்க சேவகர்கள் உள்ளே நுழைந்து...] சேவகர்: ஏ, கிழம்! இதென்ன தண்டச் சோற்று மட மாக்கிவிட்டீங்க, தண்டாயுதபாணி கோயிலை. . மகள்: கோயில் கலனாகி விட்டது. யாரும் இப்போது இங்கு வருவதில்லை. சேவ: அதனாலே, இதுகளுக்கு வீடு ஆக்கி விட்டாயா, கோயிலை? மகள்: வௌவால்கள்தானய்யா இங்கு வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன! சேவ: வாயாடியாச்சே நீ! தெரியுமே! தேவாலயத்தை அசுத்தமாக்கினால் என்ன தண்டனை தெரியுமா? மகள்: அசுத்தமாக்கவில்லையே! இங்கே இருந்த குப்பை கூளங்களை, நான்தான் கூட்டி எடுத்துச் சுத்தம் செய்தேன். கவி: இந்தப் பஞ்சைகளுக்கு வேறே இடம் இல்லே தங்க? சேவ: (கேலியாசு) அதனாலே, கோயிலிலே குடியேறி விட்டிங்களா? ஏ. கிழவா? நாளை காலையிலே வந்து பார்ப் பேன் - இடம் காலியா இருக்க வேணும். தெரிந்ததா? இல்லே பிறகு. ஆமாம், நான் மனுஷனாக இருக்க மாட்டேன்- சொல்லிவிட்டேன். [கவிராயரும், மகளும் பஞ்சைகளைப் பார்த்துப் பரிதாபப்படுகிறார்கள்.) மகள்: இந்தக் கண்றாவிக் காட்சியைக் காண மறுக்கி றார்கள். கருணாமூர்த்திகள்.