106 சொர்க்கவாசல் கவி: நேரம் ஏது மகளே! தேரும் திருவிழாவும், அபி ஷேகமும், ஆராதனையும் காணவே காலமெல்லாம் செல் வாகிவிடுகிறது. கால் கை போனதுகளையும், கண் போனது களையும் காண நேரம் கிடைக்குமா? மகள்: வேறு எங்கே போவது? கிவி: எங்கே போனார் புத்தபிரான்? காடு மேடு எங் செங்கோ சென்றாரே, அழகான அரண்மனை அவருக் கென்று இருந்தும். அன்னக் காவடிகள் நாம்-எங்கு போனா என்ன? வா, மகளே! மரத்தடியெல்லாம் நமக்கு மாளிகை தானே! {சற்று தொலைவிலே ஒரு ஆலமரம் தெரிகிறது. அதை மகளுக்குக் காட்டி...] கவி: அதோ, புதிய மாளிகை... [மரத்தடியில் வந்து சேருகிறார்கள், பஞ்சைக் கூட் டத்தினர். 'அன்பு நிலையம்' என்று மரத்தடி யில் செதுக்குகிறார் கவிராயர். காட்சி-59 டம்: சோலைநாட்டு ஆரண்மனை உட் புறம். இருப்: குமாரதேவி, செந்தாமரை. நிலைமை: சோலைநாட்டு மயில் கொடி கெம்பீரமாகப் பறந்து கொண் டிருக்கிறது, அரண்மனை முகப் பில். இந்தச் சின்னம் அணிந்த படைவீரர்கள் அங்கு மிங்கும் காவல் இருக்கிற காட்சி தெரி கிறது. அரண்மனை உட்புறம், தனி அறை. சுவற்றிலே மயில் கொடிச் சின்னம். பொறிக்கப் பட்டிருக்கிறது. பெரிய ஆசனம்
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/106
Appearance