உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சொர்க்கவாசல் மதி: என்ன காரணம் இவன் கோபத்துக்கு? சொல், பார்க்கலாம். வாலி: (கேலியாக) ஆடவரின் கோபத்துக்குக் கார ணம்கூட வேண்டுமா? யாரிடமாவது சண்டை போட்டிருப் பான். நையப் புடைத்திருப்பார்கள். மதி: தவறு. எண்டை போட்டிருந்தால் உடையாவது கலைந்திருக்குமல்லவா? அலங்காரமான உடை அழகு இல் லாதவனுமல்ல • வாலி: யாராவது காதலிக்க மறுத்திருப்பார்களோ? மதி: உண்மைக்குச் சமீபமாக வருகிறாய்--ஆனால் முழு உண்மை அது அல்ல---உண்மைக் காதல் கொண்டவ னாக இருந்தால், கோபம் குறைவாகவும், ஏக்கம் அதிகமாக வும் இருந்திருக்கும், கண்களில், (வாலிபன் அந்த உரை கேட்டு ரசித்து.] வாலி: பெரிய அனுபவசாலி போலிருக்கிறதே! (இன்னோர் ஓவியத்தைக் காட்டி] இதோ, பார்! மனைவியிடம் சிக்கிக் கொண்டு அவதிப்படும் கணவன். (சிரித்தபடி) காதைப் பிடித்தே திருகி விடுகிறாளே! மதி: அப்போதும் அவன் முகத்திலே, இலேசாகப் புன்னகை பார்த்தாயா? [வேறோர் படத்தைக் சுண்டு வாலிபனை இழுத் துக் கொண்டு அந்தப் பக்கம் சென்று] மதி: இதைப் பார்த்தாயா, பேராசைக்காரன்! அசல் சோமநாதரேதான்! கனவு காண்கிறான். அவனைச் சுற்றி மாடமாளிகை, கூட கோபுரங்கள்! பார்த்தாயா? மேகங்க ளெல்லாம் அவ்வித உருவமாகத் தெரிகின்றன அவனுக்கு. சோமநாதரேதான். வாலி: யார், சோமநாதன்?